Wednesday, April 17, 2013

FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை

FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை


இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).

தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.

அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.

முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.

அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.

இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.

தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.

உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.

இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?


ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல்  வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்  இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidonal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என் றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடங்கி  பிள்ளைகளை அடிப்பதுவரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும், பெண்ணை உச்சகட்டம்  அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது.

ஆண் பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண் டுசெல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந் தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சக்கட்டத்துக்கு ஆண்  உதவுவதுதான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay)  அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் (Erotic Site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக()மாற்ற வேண்டும். பாலியலை  நமது தன்னமைவில் இருந்து (Sexual Act) கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல் (Basic Instinct) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாலுறவில் பெண் உச்ச நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து ஒழுங்கு விதிமுறைகளையும்  உடைக்க வேண்டும். அதாவது, பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம்  அற்ற புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில்  உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும். 

Tuesday, April 16, 2013

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் 


விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.

1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.

ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது. 

குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.

குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து நிறுவனர் பரம்பரையின் உரிமைகள் ரத்தாகும். இது தொடர்பான சட்ட திருத்தத்துக்கான சட்ட முன் வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிதி நெருக்கடிகள் ஏற்பட்டன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.

இது குறித்து ஆய்வு நடத்திய தமிழக அரசின் கல்வித்துறையினர் நிதி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதனை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டார். இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இதற்கான சட்ட திருத்த சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் நேற்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது:

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்பவர் சிதம்பரம் அருகே கல்லூரிகளை நடத்தினார். அதில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உயர்கல்வி போதிக்கப்பட்டது. 1928ல் அந்த கல்வி நிறுவனங்களையும் அதனை சார்ந்த சொத்துகளையும் அப்போதைய உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்த அண்ணாமலை செட்டியார், அண்ணாமலை நகரில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க ரூ.20 லட்சம் வழங்கவும் சம்மதித்தார். அவர் மற்றும் அவரது வாரிசுகள், அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பெறத்தகுதியுடையவர்கள் என்று ஒப்புக் கொண்டிருந்தார்.

அதன்படி தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக 1928ல் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் நிறுவனராக ராஜா அண்ணாமலை செட்டியார் அங்கீகரிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவரது வாரிசுகள், உரிய அதிகாரங்களை பெற்று வந்தனர். பல்கலைக்கழக சட்டத்தின்படி நிறுவனரே பல்கலைக்கழக இணைவேந்தராக இயங்கி வருகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர் 3 பெயர்களை கொண்ட பட்டியலை வேந்தருக்கு பரிந்துரை செய்தால் அதில் ஒருவரை துணைவேந்தராக வேந்தர் நியமனம் செய்வார். அவ்வாறு நியமனம் செய்யப்படும் துணைவேந்தர், முதன்மை நிர்வாக அலுவலர் என்ற வகையில் பிற ஊழியர்களை பணி அமர்த்தும் அதிகாரம் உடையவராகவும், வாரிய உறுப்பினராகவும் செயல்படுவார்.

நிறுவனர் பதவியானது வாரிசு அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியாகும். அவரது பரிந்துரையில் துணைவேந்தராகும் ஒருவரால் பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சலுகையானது சமூக ஒழுங்கு அமைவில் அனைவருக்கும் உரிமை என்ற கொள்கை, கோட்பாட்டின்படி ஏற்க இயலாததாக உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் 2012 நவம்பரில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக்கள் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், நுழைவாயில் கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டன. இதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

 பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக வழங்கப்படும் நிலையில், எப்போதும் இல்லாத வகையில் அந்த பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியது. தேவைக்கு அதிகமான ஊழியர்கள் நியமனம், மற்ற தேவைகளுக்கு பல்கலைக்கழக நிதியை பயன்படுத்துதல் ஆகியவற்றால் பல்கலைக்கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.

மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், ஊழியர்களின் அச்சத்தை போக்கவும், அண்ணாமலை பல்கலைக்கழக நிதி மற்றும் பிற முறைகேடுகள் குறித்து தணிக்கை செய்து மதிப்பீடு வழங்கும் உள்ளாட்சி நிதிக்குழுவை தமிழக அரசு அமைத்தது. தணிக்கை குழு அறிக்கையை பகுத்தாய்வு செய்து அரசு பரிந்துரைக்கும் உயர்மட்டக்குழுவையும் அரசு அமைத்தது.

கடந்த 1928ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தில் உள்ள அம்சங்கள் பிற பல்கலைக்கழக சட்டங்களோடு ஒத்திருக்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கேடான நிலைக்கு சென்றது. இதனால் இந்த சட்டத்தில் திருத்தங்கள் தேவை.

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் கடமையும் அரசுக்கு உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதை உறுதி செய்யும் கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே தற்போதைய அண்ணாமலை பல்கலைக்கழத்தின் சட்டத்தை மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இணையாக்கி சட்ட மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட முன்வடிவு மூலம் துணைவேந்தரின் அதிகாரங்களை செயல்படுத்த நிர்வாகி ஒருவர் அரசால் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர் பிற பல்கலைக்கழகத்திலோ, கல்லூரியிலோ பேராசிரியர் அல்லது அரசு செயலாளர் அந்தஸ்துக்கு குறையாதவராக இருத்தல் வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடங்கள், கருவிகள், புத்தகங்கள், மற்றும் நூலகம் உள்ளடங்கிய அசையும், அசையா சொத்து அனைத்தையும் அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகியே செயல்படுவார். துணைவேந்தர், பதிவாளர் தவிர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலை வரலாறு

அண்ணாமலை பல்கலை.யின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ஆச்சரியங்களும் பெருமிதமும் கொட்டிக் கிடக்கின்றது. இந்த பல்கலை. முதலில் ஒரு கல்லூரியாக தொடங்கப்பட்டது.

* கடலூர் மாவட்டம் சிதம்பரம் திருவேட்களம் பகுதியில் 1920ம் ஆண்டு மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டது.
* கல்லூரிக்கு முதலாவது முதல்வராக இருந்தவர், இன்றளவும் தமிழ் தாத்தா என பெருமையுடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர். அப்போது, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த சமயம், 1904ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய பல்கலை. சட்டப்படி தமிழை பயிற்றுவிக்க முடியாமல் இருந்தது. தமிழ் மொழியை வட்டார மொழியாக ஆங்கிலேயர் அறிவித்து இருந்தனர். வட்டார மொழியில், பல்கலைக் கழகங்களை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் (அப்போது சென்னை மாகாணம்) நீதிக் கட்சியின் ஆட்சி நடந்தது. அந்த அரசு இயற்றிய சட்டத்தின் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக மீனாட்சி கல்லூரி மாறியது.
* 1921,1948 வரை அண்ணாமலை செட்டியார் இணைவேந்தராக இருந்துள்ளார். முதலில் தமிழ், பொருளாதாரம் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் பிஏ வகுப்புகள் தொடங்கப்பட்டது. 1931ல் ஆனர்ஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
* சென்னை, ஆந்திரா பல்கலைக்கழகங்களில் ஏம்.ஏ வகுப்பு தொடங்கும் முன்னே இங்கு தொடங்கப்பட்டது. இசை ஆராய்ச்சிக்கு என தனிப் பாடம் தொடங்கி முழுவதும் தமிழிலேயே பாடல்கள் கற்றுத் தரப்பட்டன.
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் நகருக்கு மேற்கே 1,500 ஏக்கர் பரப்பளவில் அண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. 75 ஆண்டுகளில் 48 துறைகளாக வளர்ந்துள்ளது. தற்போது 12,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். டொரொண்டோ, கனடா ஆகிய வெளிநாடுகளிலும் அண்ணாமலை பல்கலை.யின் படிப்பு மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயில் விவகாரம் ஐ.நா. கோர்ட்டில் 2 நாடுகள் வழக்கு

கோயில் விவகாரம் ஐ.நா. கோர்ட்டில் 2 நாடுகள் வழக்கு


கம்போடியா, தாய்லாந்து நாடுகளின் எல்லையில் பிரியா விகார் கோயில் அமைந்துள்ளன. இது யுனெஸ்கோவால் உலக புராதனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு நாடுகளும் உரிமைக் கோரி வருகின்றன. இந்நிலையில், தங்களிடையே உள்ள பிரச்னையை தீர்த்துக் கொள்வதற்காக இரு நாடுகளும் தற்போது நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளன.

ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் 21 உலக சாதனை

ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் 21 உலக சாதனை


ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில் 150 உலக சாதனைகளை படைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சாதனையை 12 ஆசிரியர்கள், 138 மாணவ, மாணவிகள் நிகழ்த்த உள்ளனர். இந்த சாதனை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர்.

தேங்காய் திட்டு பள்ளியில் மாணவன் தர்சன் ஜெயின் 12 மணி நேரம் டிரம்ஸ் இசைக் கருவியை வாசித்தலும், உதயபாபு 12 மணி நேரம் கீ போர்ட் வாசித்தலும், மாணவர் ரோகித் காகிதங்களால் உருவாக்கப்பட்ட உலகில் மிக நீளமான சங்கிலியும், மாணவி அங்கிதா குமாரி 10 மணி நேரத்தில் அதிகமான ரோபோக்களை உருவாக்குதல், மாணவன் ஜீவா கைவிரல்களில் அதிகமான இரு சக்கர வாகனங்களை ஏற்றியும், கணபதி விஷ்வா கைவிரல்களை கொண்டு அதிகமான டைல்ஸ்களையும் உடைத்தும், அஸ்வின்குமார் 3 மணி நேரத்தில் அதிகமான முறை ருபி கியு சரி செய்யும் சாதனைகளை படைத்தனர்.

சம்பூர்ணா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவன் பிரசன்னா சாரதி உலகில் மிக அதிகமான நேரம் 9 மணி நேரம் பின்புற ஸ்கேட்டிங் செய்து சாதனையும், மாணவன் கணபதி ஈஸ்வரன்  உலகில் அதிக நேரம் ஸ்கேட்டிங் மரத்தான் சாதனையும் நிகழ்த்தினர். நேற்று ஒரே நாளில் 21 மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்கள். இந்த சாதனை நிகழ்ச்சி 24ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

பக்தர்கள் காணிக்கை செலுத்திய 260 டன் தலைமுடி தேக்கம்

பக்தர்கள் காணிக்கை செலுத்திய 260 டன் தலைமுடி தேக்கம்


திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 5வது ரக தலைமுடி ஏலம் போகாததால் 260 டன் தேங்கியுள்ளது. இதனால் விலையை குறைத்து ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி சுவாமிக்கு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த தலைமுடிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது.

இருப்பினும் உலக சந்தையுடன் மதிப்பிடும்போது இந்த விலை குறைவு என கருதி ஆன்லைனில் ஏலம் விடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள எம்.எஸ்.டி.சி. நிறுவன உதவியுடன் ஆன்லைனில் கடந்த ஆண்டு ஏலம் விட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.150 கோடி கூடுதல் லாபத்துடன் ரூ.200 கோடிக்கு தலைமுடி ஏலம் போனது. ஆனால், ஐந்தாவது ரக தலைமுடி மட்டும் ஏலம் போகவில்லை. இது தேவஸ்தான நிர்வாகத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரக முடி 260 டன் தேங்கியுள்ளது.

எனவே, ஐந்தாவது ரக தலைமுடியின் இருப்பை குறைப்பதற்காக, ஏலத்துக்கான நிர்ணய விலையை குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கிலோ ரூ.80 என நிர்ணயம் செய்யப்பட்ட விலையை தேவஸ்தான நிதித்துறை அதிகாரிகள் ரூ.10 குறைத்து ரூ.70க்கு ஏலம் விட பரிந்துரை செய்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் ரூ.70 விலையில் ஐந்தாவது ரக தலைமுடியை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குஜராத் சிங்கங்களை ம.பி.க்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி

குஜராத் சிங்கங்களை ம.பி.க்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி


குஜராத் கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை, மத்தியப் பிரதேசத்தின் பல்பர் குனோ சரணாலயத்துக்கு 6 மாதங்களுக்குள் மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் 400 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இங்கு சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றை பாதுகாக்க மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்பர் குனோ சரணாலயத்துக்கு மாற்ற வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பல்பர் குனோ சரணாலயத்தில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதால், சிங்கங்களை மத்திய பிரதேசத்துக்கு மாற்ற வேண்டும் என மாநில அரசும் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு குஜராத் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய பிரதேசத்தின் பன்னா வனப் பகுதியில் உள்ள புலிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. அதனால் குஜராத்தில் உள்ள சிங்கங்களை மத்தியப் பிரதேசத்துக்கு மாற்றுவது பாதுகாப்பனது அல்ல என்ன குஜராத் கூறியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘குஜராத் வனப் பகுதியில் சிங்கங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அதற்கு மாற்று இடம் தேவைப்படுகிறது. சிங்கங்களை குஜராத்திலிருந்து, மத்திய பிரதேசத்துக்கு 6 மாதங்களுக்குள் மாற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வனப் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள காட்டெருமை உள்ள சில விலங்குகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி- முன்னாள் பஸ் சாரதி!

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி- முன்னாள் பஸ் சாரதி!


தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சோஷலிச கட்சியை சேர்ந்த நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

வெனிசூலா ஜனாதிபதியாக இருந்த ஹியூகோ சாவேஸ்ன் மறைவை அடுத்து, அந்நாட்டுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 80 சதவிகித மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில், 50.7 சதவிகித வாக்குகள் பெற்று நிகோலஸ் மதுரோ ஜனாதிபதி ஆனார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் கேப்ரியல்ஸ் 49.1 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தலைநகர் கராகாஸில் தமது ஆதரவாளர்களிடையே பேசிய நிக்கோலஸ் மதுரோ, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோ மறைந்த ஹியூகோ சாவேஸின் தீவிர ஆதரவாளர். 45 வயதான நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டு துணை ஜனாதிபதியாக இருந்து வந்தார். பஸ் சாரதியாக வாழ்க்கையை தொடங்கிய நிக்கோலஸ் மதுரோ, பின்னர் அரசியலில் ஈடுபட்டு, அந் நாட்டுக்கே ஜனாதிபதியாகியுள்ளார்.

வந்துகொண்டிருக்கும் காந்தப் புயல்

வந்துகொண்டிருக்கும் காந்தப் புயல்


சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு ஒன்றினால் உருவான காந்தப் புயல் ஒன்று இன்று சனிக்கிழமை பூமியை அடையவிருக்கிறது.

இந்தக் காந்தப் புயலினால் செய்மதிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் சக்தி பிறப்பாக்கிகள் ஆகியவற்றில் இடையூறு ஏற்படலாம்.

ஆனால், இவற்றில் முக்கியமாக, பூமியின் மேலே உள்ள ஆகாயப் பரப்பில் ஏற்படக்கூடிய ஒளி வண்ணக் காட்சி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இவை நொதர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும்.

அதிக சக்தியேற்றம் பெற்ற துணிக்கைகள் புவியை மோதுவதால் ஏற்படுவதே காந்தப் புயல் எனப்படும் இயற்கை நிகழ்வாகும்.

“அடடா.. செத்து விட்டீர்களா? இதோ அழிக்கிறோம் பைலை!” -கூகிளின் புதிய திட்டம்!

“அடடா.. செத்து விட்டீர்களா? இதோ அழிக்கிறோம் பைலை!” -கூகிளின் புதிய திட்டம்!


ஒருவரது இறப்புக்குப் பின் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை அழித்திடும் ‘புதிய’ வசதியை ஜி-மெயில், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட சேவைகளில் ஏற்படுத்தி, இணையத் தொழில்நுட்ப உலகில் பரபரக்க வைத்திருக்கிறது கூகுள்.

ஒரு கணக்கைச் செயலிழக்க வைப்பதற்கான தேதி குறிக்கும் உணர்வுப்பூர்வமான விஷயத்தை கூகுள் நிறுவனம் செயல்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு வசதியை ஏற்படுத்திய முதல் முன்னணி நிறுவனம் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறது கூகுள் நிறுவனம்.

தன் வாழ்நாளுக்குப் பிறகு, தன்னுடைய மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும் என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. அந்த டேட்டாக்களை அழித்துவிடுவதற்கான வசதியைத்தான் கூகுள் இப்போது செய்திருக்கிறது.

இதற்கு இரண்டு விதமான வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. ஒரு பயனாளி தனது அக்கவுண்டை முழுமையாக டெலிட் செய்யும் தேதியை தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது முதல் வாய்ப்பு. அல்லது, தனக்கு நம்பகமான ஒரு நபரை முன்கூட்டியே பரிந்துரைத்து, தன் மறைவுக்குப் பிறகு அந்த நபரால் தனது அக்கவுண்டை டெலிட் செய்துவிடுவது இரண்டாவது வாய்ப்பு.

ஒரு பயனாளியின் டேட்டாக்கள் எப்போதும் ரகசியமாகப் பாதுகாப்பதற்கு, இந்தப் புதிய வசதி வழிவகுக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரைத் தயக்கம் காட்டி வந்த ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்களும், கூகுளின் இந்தப் புதிய வசதிக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தனது முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் ‘தேதி குறித்தல்’ தொடர்பான வசதி பற்றி முழுமையாக அறிய – http://googlepublicpolicy.blogspot.co.uk/2013/04/plan-your-digital-afterlife-with.html

டொரன்டோவில் வானத்தில் இருந்து கொட்டுகின்றன பனிக்கட்டிகள்!

எச்சரிக்கை: டொரன்டோவில் வானத்தில் இருந்து கொட்டுகின்றன பனிக்கட்டிகள்!


ரொறொன்ரோவில் இன்று பனிக்கட்டிகளுடன் கூடிய கனமழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. பயங்கர இடி, மின்னலுடன் 6 அங்குலம் அளவிற்கான பனிக்கட்டிகளும் சாலைகளில் குவியக் கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழைப்பொழிவு நாளையும் நீடிக்கும் என்பதால் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஒன்றோரியப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் திடிரென வீசிய காற்றினால் சாலைகளில் ஆங்கங்கே மின் கம்பங்கள் அறுந்து கிடப்பதுடன் அவற்றை பனியும் மூடியுள்ளதால் மறு சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உண்டான காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கில் நகர்ந்து தற்போது ரொறொன்ரோவில் மையம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சனியில் மழை பெய்வது எப்படி?

சனியில் மழை பெய்வது எப்படி? உங்களுக்கு தெரிந்திராது.. இவர்கள் அறிவார்கள்!


சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது: சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.

மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அக்கிரகத்தின் வளி மண்டலத்துக்கும் இடையே தொடர்புள்ளதைக் கண்டறிந்துள்ளோம்” என்றனர்.

சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கிரகமான சனியை சுற்றி அபூர்வமான வளையம் காணப்படுகிறது. இந்த வளையம் முழுவதும் பனித் துகள்களும், சிறு கற்களும், வாயுக்களும் நிரம்பியுள்ளன.