ஹிரோஷிமா அணுகுண்டை போல்
30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
ரஷ்ய வான்வெளியில் கடந்த வெள்ளியன்று வெடித்த எரிகல்லின் வெடிப்பு சக்தி, ஹிரோஷிமாவில் ந¤கழ்ந்த அணுகுண்டு வெடிப்பை போல 30 மடங்கு சக்தி வாய்ந்தது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் யூரல்ஸ் மாகாண வான்பகுதியில் 55 அடி பரப்பளவு, 10 ஆயிரம் டன் எடை கொண்ட எரிகல் விழுந்தது. மணிக்கு 6,43,734 கி.மீ. வேகத்தில் விழுந்த அந்த கல் 32.5 வினாடிகளில் பூமியில் இருந்து சுமார் 24 கி.மீ. மேலே வெடித்து சிதறியது. அந்த எரிகற்கள் செல்யாபின்ஸ்க் நகர் மீது விழுந்ததில் 1200 பேர் காயமடை ந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து, நாசாவில் எரிகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானியான பில் கூக் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களையும் விடவும் இந்த எரிகல்லின் ஆற்றல் பெரியது. சூரியனின் வெளிச்சத்தை விட அதிக ஒளியுடன் எரிந்துகொண்டு வந்த இந்த எரிகல் 500 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தியது. இது 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டைப் போல 30 மடங்கு சக்தியாகும். எரிகற்கள் வேகமாக விழுந்ததால் உயரமான கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, கதவுகள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன.
டிஏ14 என்ற பிரமாண்ட எரிகல் வெள்ளிக்கிழமை பூமிக்கு மிக அருகில் வந்தது. அந்த கல்தான் ரஷ்யாவில் விழுந்தது என சிலர் கருதுகின்றனர். அது தவறு டிஏ14 சென்ற சுற்றுப்பாதையும் ரஷ்யாவில் விழுந்த எரிகல் பாதையும் முற்றிலும் வெவ்வேறானது. 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்கா பகுதியில் ஒரு எரிகல் விழுந்தது. அதற்கு பிறகு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய எரிகல் இதுÕÕ என்று கூக் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!