ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதற்கு மக்கள் ஆதரவு குறைவு
கிராபூண்டென் மாநிலத்தில் எதிர்வரும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தலாமா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்தியதில் மக்கள் ஆதரவு 42 சதவிகிதமாகவும் மற்றும் எதிர்ப்பு 45 சதவிகிதமாகவும் உள்ளது.
பெண்களின் ஆதரவு இந்த விளையாட்டுகளுக்குக் குறைவாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இதனை நடத்தினால் செலவு அதிகமாகும் என்பதால் நடத்தத் தேவையில்லை என்று காரணம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 53 சதவிகிதம் பேர் இந்த விளையாட்டுகளை நடத்துவதால் பொருளாதார நிலை உயரும் என்கின்றனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உள்கட்டமைப்பு செலவுகள் 4.5 பில்லியன் ஃபிராங்க் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மத்தியக் கூட்டரசு இந்த விளையாட்டுகளுக்கு ஒரு பில்லியன் ஃபிராங்க் அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் ஆதரவாளர்கள் 1.5 பில்லியன் ஃபிராங்க் எதிர்பார்க்கின்றனர்.
சுவிஸ் ஜனாதிபதியும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உவேலி மாரெர்(Ueli Maurer) கூறுகையில், வங்கிகளால் இந்நாட்டுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை இந்த விளையாட்டு மாற்றிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!