Top News Worldwide : Body Language ஒபாமாவுக்கே!!! வாங்க.. வந்து பழகி பாருங்க!!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்தலில் ஜெயித்து இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவரது ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில், வித்தியாசமான ஜனாதிபதி ஒருவரை காணமுடிந்தது. சம்பிரதாயங்களற்ற, ஜாலியாக தலைவர் என்ற இமேஜை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது அமெரிக்க ஜனாதிபதியின் ‘புதிய இமேஜ், புதிய அணுகுமுறை’ என்று வர்ணிக்கின்றன அமெரிக்க மீடியாக்கள். திட்டமிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட இமேஜ் அது என்றும், அமெரிக்கர்கள் பற்றி மற்றைய நாட்டவரின் நினைப்பு இந்த இமேஜை ஒட்டியதாகவே இனி இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.
மூன்று நாடுகளுக்கான ஒபாமாவின் விஜயத்தில் முதலாவது நாடான மியன்மாருக்கு சென்றபோது, இந்த புதிய இமேஜ், அமெரிக்க மீடியாவில் பெரிய விஷயமாக காண்பிக்கப்பட்டது. ஆனால், ஒபாமாவின் தாய்லாந்து விஜயத்தின்போது, நிலைமை தலைகீழாக மாறியது.
ஒபாமா ஏற்படுத்த முயற்சிக்கும் இமேஜின் மொத்த உருவமாக இருந்தார் தாய்லாந்தின் மிக இளைய பெண் பிரதமர் யிங்லக் சினவாத்ரா.
மியன்மாரில் ஒபாமா பெயரைத் தட்டிச்செல்ல, தாய்லாந்தில் ஒபாமாவைவிட அதிகம் கவனிக்கப்பட்டார் யிங்லக். “யார் இந்த பெண்?” என்று தலைப்பு இட்டிருந்தது பாஸ்டன் குளோப் பத்திரிகை!
நியூயார்க் டைம்ஸ், “அமெரிக்கர்கள் என்றால் ஆசியர்களுக்கு உள்ள ஒருவித தாழ்வு மனப்பான்மை அடியோடு தென்படாமல், தனது பாடி லேங்குவேஜ் மூலம் ஒரு சுப்பிரியர் லெவலுக்கு சென்றார் யிங்லக்” என்று எழுதியது. “அவரது சில முகபாவங்கள் அமெரிக்க ஜனாதிபதியை லேசாக கிண்டலடிப்பது போலவும், வம்புக்கு இழுப்பது போலவும் இருந்தன” என்றது, ஃபாக்ஸ் நியூஸ் டி.வி. சேனல்.
அமெரிக்க மீடியாவே இப்படி எழுதினால், தாய்லாந்து மீடியா சும்மா விடுவார்களா? “ஒபாமாவைவிட எங்கள் பெண் பிரதமர் டாப்! பாருங்கள், அவரைப் பாருங்கள்” என்று எழுதியது, பாங்காக் போஸ்ட். சுருக்கமாக சொன்னால், “வாங்க.. பழகிப் பாருங்க”
இவர்கள் ஆகா, ஓகோ, என்று சொல்லும் விதத்தில் அப்படி என்னதான் செய்தார்? தனது பாடி லேங்குவேஜ் மூலம் எப்படி கவனிக்க வைத்தார்? “அவரது சில முகபாவங்கள் அமெரிக்க ஜனாதிபதியை லேசாக கிண்டலடிப்பது போலவும், வம்புக்கு இழுப்பது போலவும் இருந்தன” என்ற கூற்று நிஜமா?
ஒபாமாவுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை தந்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள், விளக்கம் ஏதும் தேவையில்லை. யிங்லக் சினவாத்ராவின் பாடி லேங்குவேஜையும், முகபாவத்தையும் கவனியுங்கள்.
இதோ ஒபாமா பாங்காக் வந்து இறங்கிவிட்டார். அடுத்த போட்டோவில் திருவிழா ஆரம்பம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!