இன்று யாசர் அராபத்தின் கல்லறை உடைப்பு
பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.
அராபத் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அராபத் அணிந்திருந்த உடைகளை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வகம் ஆய்வு செய்தது.
அப்போது அவரது உடையில் கடுமையான 'போலோனியம்-210' என்ற 'ஐசோடோப்' கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அராபத்தின் உடலில் இந்த கொடிய விஷம் செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியாவை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரின் மேற்கு கரையில் உள்ள அராபத்தின் இல்லத்தில் உள்ள கல்லறை இன்று உடைக்கப்படுகின்றது.
கான்கிரீட்டினால் கட்டப்பட்ட இந்த கல்லறையை முழுமையாக உடைத்து, அராபத்தின் உடலை வெளியே எடுக்கும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவரது உடலை தோண்டி எடுப்பது தெரியவந்தால், ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!