நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புயல் காற்றை தாங்கும் குடை
புயல் காற்றை தாங்கும் குடை தயாரிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் குடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் மழையின் போதுதான் அதிக அளவில் அது உபயோகமாகிறது. ஆனால் மழையின்போது சுழன்று வீசும் 20 கி.மீட்டர் வேக காற்றை கூட குடைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவை வெளிப்புறமாக விரிந்து பயனற்று போகிறது. எனவே கடும் புயல் காற்றை கூட தாங்கும் வகையில் புதிய வகை குடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
இவை மணிக்கு 113கி.மீட்டர் வேகத்தில் வீசும் புயல்காற்றை தாங்கக் கூடியது. மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் போட்டியின்போது தலையில் மாட்டிக் கொள்ளும் “ஹெல்மெட்” போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குடைகள் எந்த திசையிலும் சுழன்று வீசும் கடுமையான புயல் மற்றும் சூறாவளிக்கு ஏற்ப வளைந்து கொடுத்து பழுதாகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!