Monday, November 19, 2012

அமெரிக்க ராணுவ அதிகாரி ஜப்பானில் கைது! வீடு புகுந்து துயில் கொண்ட குற்றம்!!

அமெரிக்க ராணுவ அதிகாரி ஜப்பானில் கைது! வீடு புகுந்து துயில் கொண்ட குற்றம்!!


ஜப்பானிய போலீஸ் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைதுக்கான காரணம், ஆச்சரியமானது. அமெரிக்க ராணுவ அதிகாரி, திறந்திருந்த ஜப்பானிய வீடு ஒன்றுக்குள் சென்று தூங்கியதே, அந்த காரணம்!

ஜப்பானின் தென்பகுதி நகரான ஒக்கினாவாவில், அமெரிக்க ராணுவ தளம் உள்ளது. இங்குள்ள ராணுவ வீரர்கள், ஒக்கினாவா நகருக்குள் சும்மா சுற்றிக்கொண்டு இருக்க கூடாது என கட்டுப்பாடும் உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் 1-ம் லெப்டினென்ட் அதிகாரி தாமஸ் சாங்குவெட் என்பவர் ஒக்கினாவா நகருக்குள் சென்று, அங்கிருந்த அப்பார்ட்மென்ட் பில்டிங் ஒன்றில் உள்ள வீடுகளை திறந்து பார்த்துள்ளார். ஒரு வீடு பூட்டாமல் திறந்து இருக்கவே உள்ளே சென்று பெட்டில் ஜாலியாக தூங்கியும் விட்டார்.

வீட்டு சொந்தக்காரர் வந்து பார்த்து போலீஸூக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் வந்து, ராணுவ அதிகாரியை தட்டி எழுப்பி கைது செய்துள்ளனர்.

ஒக்கினாவா கவர்னர் ஹிரோகாசு நகாய்மா, “இது அதிர்ச்சி தரும் விஷயம். ஜப்பானிய அரசு, இது தொடர்பாக அமெரிக்க அரசுடன் உடனே பேசவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்க தூதரிடம் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யொஷிகிகோ நோடா, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கவுள்ளார். அப்போதுஈ இந்த விவகாரம் தொடர்பாக பேசுவார் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

சரி. அமெரிக்க ராணுவத்தின் 1-ம் லெப்டினென்ட் அதிகாரி தாமஸ் சாங்குவெட், எதற்காக ஜப்பானியரின் வீட்டுக்குள் போய் தூங்கினார்? போதை அதிகமாகி விட்டதால், ராணுவ தளத்துக்கு செல்ல வழிதெரியாமல், திறந்திருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்து விட்டாராம்.

இதற்கு ஒபாமா என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!