Thursday, November 22, 2012

நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது

நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது



நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதியில் 1978 மீற்றர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ என்ற எரிமலை உள்ளது.

கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது வெடித்து சிதற தொடங்கி உள்ளது.

இதனால் வெளிவரும் புகையானது சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் நோக்கி எழும்பும்.

தேசிய பூங்கா அமைந்துள்ள இப்பகுதிக்கு குழந்தைகளோ மற்றும் சுற்றுலா பயணிகளோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.








No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!