Wednesday, August 6, 2014

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்


ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ். இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய ஆப்பிரிக்கா நாடுகளில் 1,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 672 பேர் பலியாகியுள்ளனர்.

பரவிய விதம்

விலங்கிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது. குறிப்பாக பழம் தின்னி வவ்வாலிலிருந்து பரவியுள்ளது.

இவ்வைரஸ் தாக்கியுள்ள மனிதர்களிலிலிருந்து மற்ற மனிதர்களுக்கு ரத்தத்தின் மூலம் பரவுகிறது.

எபோலா வைரஸ் தாக்கினால் குடும்ப உறுப்பினர்களும், சிகிச்சை அளிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதன்முதலில் பரவியதால் இதற்கு "எபோலா வைரஸ்" என பெயரிடப்பட்டது.

அறிகுறிகள்

அறிகுறி 1: காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டை வலி. 
அறிகுறி 2: மத்திய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. 
அறிகுறி 3: நோய் முற்றிய நிலையில் ரத்தவாந்தி, கண், மூக்கு, வாயில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

உலக நாடுகள் தீவிரம்

இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

பாதிப்பிற்கு தீர்வு காண்பது எளிதல்ல என்பதால் மேற்கு நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வைரஸ் பாதிப்பு தொற்று பரவுவதை தடுக்க அந்நாட்டின் சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிதியுதவி

எபோலா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவம் அளித்து, நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் அந்நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து உலக வங்கியின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு, எபோலா நோய் பாதித்த 3 மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு ரூ.1,200 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை உலக வங்கி அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நோய் தாக்கியவரிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

மருத்துவர்களும், குடும்ப உறுப்பினர்களும் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பிறகே அருகே, அவர்களின் அருகே செல்ல வேண்டும்.

நோய் தாக்குதலால் பலியான உடலை, மருத்துவரின் அறிவுரையுடன் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!