கடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்
கடலில் வாழும் தாவரங்கள் மற்று உயிரினங்கள் பற்றிய அறிவு இன்றைய மனிதனிடம் 1/3 பங்கே உள்ளது.
எனவே கடல் உயிரினங்கள் பற்றி இன்னும் அதிகளவு மனிதன் கற்க வேண்டியுள்ளது என நியூசிலாந்து கடல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுதும் கடலுக்கடியில் சுமார் 1 மில்லியன் உயிரினங்கள் வாழ்கின்றன.
மிக அரிதான மற்றும் அழகிய கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ள நியூசிலாந்தின் கடல் பரப்பில் ஆய்வு செய்து வரும் கடலியலாளர்கள் மேலும் 20,000 கடல் உயிரிகளை கடந்த 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 21ஆம் நூற்றாண்டே இதுவரை கடல் வாழ் உயிரினங்களை அதிகம் கண்டுபிடித்த நூற்றாண்டாகும் என நியூசிலாந்தின் அவுக்லாந்து பல்கலைக்கழகத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வின் பொருட்டு உலகில் அதி சிறந்த 120 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர்.
இதற்கென கடலில் வாழும் உயிரினங்களான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மற்றும் பெரிய தாவரங்கள் ஆகியவற்றை வகைப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்.
உலகெங்கும் பரந்து வாழும் கடல் வாழ் உயிரினங்களை வகைப்படுத்தும் பணியில் 32 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகளின் திறந்த பாவனைக்கான ஆன்லைன் தகவல் களஞ்சியம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!