அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்
அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொலிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பொலிவின் தொடர்ச்சியாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டதால் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
வானகங்கள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக மோதி நிற்கின்றன. இதனால் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குளான வாகனங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் சுமார் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிமூட்டம் மிகவும் அடத்தியாக ஏற்பட்டுள்ளதால் எதிரே வரும் வானத்தையும், சாலையின் சூழலையும் உடனடியாக புரிந்து கொள்ள முடியாததாலேயே அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்தில் காயமடைந்த கர்ரோல் என்பவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!