ஒபமாவின் கட்டிப்பிடிப்பு சங்கடத்தில் சிக்கி தவித்த ஆன் சான் சு கீ !
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஓபாமா, மியான்மார் சென்றுள்ளார். நேற்றைய தினம்(19) மதியம் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கிலரி கிளின்ரன் மற்றும் பராக் ஓபாமா ஆகியோர், ஆன் சான் சு கீ வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தனர். தாம் சென்ற காரில் இருந்து இறங்கியதும், அங்கே அவர்களை வரவேற்க்க வந்த ஆன் சான் சுகியை கிலரி முதலில் கட்டி அணைத்துக்கொண்டார். பின்னர் வீட்டிற்குள் சென்ற பின்னர், அவரை பாராக் ஓபாமா வளைத்து கட்டிப் பிடித்தார். சங்கடத்தில் ஆழ்ந்த ஆன் சான் சு கீ, ஒருவாறாக அதில் இருந்து மீண்டு தனது உரையை நிகழ்த்தினார்.
பராக் ஒபாமா கட்டிப் பிடித்தது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் சில சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருப்பினும் பராக் ஒபாமா அவர்களின் பேச்சு ஆன் சான் சுகியை மிகவும் நெகிழவைத்தது. உங்களுக்கு நாமும் அமெரிக்க மக்களும் எப்போதும் துணையாக இருப்போம் என்று அவர் கூறிய வார்த்தைகள் நம்பிக்கையைக் கொடுத்ததாக அமைந்தது. அவர் அதனை ஏற்றுக்கொண்டார். தற்போது மியான்மார் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள ஆன் சான் சு கீ அவர்கள், பல வருடங்களாக அந் நாட்டு அரசால் சிறைவைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மார் அதிபர் தக்ஷின் சினவர்த்தனாவை முதலில் சந்திக்காது, ஆன் சான் சுகியை முதலில் சந்தித்துள்ளார் பாரக் ஓபாமா. இதுவே அவர் ஆன் சான் சுகிக்கு கொடுத்த பெரிய மரியாதையாகக் கருதப்படுகிறது. நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பாக ஆன் சான் சுகி அவர்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நபராவார். அவர் மியான்மார் மன்னர் ஆட்சியில் மற்றும் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் எனப் பல வருடங்களாகப் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!