Wednesday, November 21, 2012

நித்தியானந்தா பலே ஐடியா! வைத்தார் செக்!

நித்தியானந்தா பலே ஐடியா! ஆச்சிரம லிங்கங்களை இடித்து தள்ளி வைத்தார் செக்!




இந்து சமய அறநிலையத்துறை தமது ஆச்சிரமத்தை கையகப்படுத்துவதை தடுக்க, ஆச்சிரமத்தில் உள்ள 1008 லிங்கங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளார், தம்மை சிவனின் அவதாரமாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா சுவாமிகள்.

திருவண்ணாமலையில் இயங்கிவரும் நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், “ஆச்சிரமத்தில் இந்து சமய சிலைகள் இருந்தால்தானே, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்? அப்படி ஏதும் இல்லாவிட்டால், இதற்கும்,  இந்து சமய அறநிலையத்துறைக்கும் சம்மந்தம் கிடையாதே”  என்று சுவாமிகளின் கற்பூரப் புத்தியில் எண்ணம் ஒதித்தது. அதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவோடு இரவாக, ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்கங்களையும் இடித்து தள்ளிவிட்டார் அவர்.

இவ்வளவு நாட்களும், ஆசிரமத்திற்குள் லிங்கங்களை வைத்துதான் பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் வழிபட வருவதும், இந்த லிங்கங்களைதான். இப்போது அவை அங்கு இல்லை.

நித்தி சுவாமிகளின் “இப்ப என்ன செய்விங்க?” ரகத்திலான இந்த மூவ் குறித்து திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைய அலுவலர்கள், சென்னை மேலிடத்திற்கு தகவல் கூறிவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!