மிக மோசமான நிலையில் பிரான்சின் பொருளாதாரம்: The Economist
பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் எப்போது வேண்டுமானாலும் நலிவடையலாம் என The Economist வார இதழ் எச்சரித்துள்ளது.
இப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வெடிக்க தயாராக இருக்கும் வெடிகுண்டை போல பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் உள்ளது.
கடனில் சிக்கித் தவிக்கும் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை விடை பொருளாதாரம் மிக மோசமாக நலிவடையும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பிரெஞ்சு தலைவர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்திற்கு தயாராக வேண்டும்.
அடுத்த ஆண்டிற்குள் அதன் நெருக்கடியை நீங்கள் உணர்வீர்கள் என்று மற்றொரு பிரிட்டிஷ் பத்திரிக்கை அரசின் பொருளாதார கொள்கையை வன்மையாக கண்டித்துள்ளது.
பிரான்சின் தற்போதைய அரசு, வருமான வரியை 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் மிக மிக குறைவே என்றும் The Economist இதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனால் இதனை பிரான்சின் தொழில்துறை அமைச்சர் வன்மையாக கண்டித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!