Monday, November 19, 2012

தமிழக கடலில் மிதக்கும் வெடிகுண்டு எச்சரிக்கை! இலங்கை கடற்படை முன்னாள் அதிகாரி சதி?

தமிழக கடலில் மிதக்கும் வெடிகுண்டு எச்சரிக்கை! இலங்கை கடற்படை முன்னாள் அதிகாரி சதி?




தமிழக கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், எச்சரிக்கை விடுக்குமாறு மத்திய உளவுப் பிரிவினர் கூறியுள்ளனர். கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என்பதே எச்சரிக்கை! கடலில் வெடிக்கக்கூடிய ஏதோ ஒரு பொருள் மிதக்க விடப்பட்டுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மிதக்கும் பொருள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவரால் மிதக்க விடப்பட்ட ஒருவகை naval mine, அதாவது கடல் வெடிகுண்டு என்று தெரிகிறது. இதை தயாரித்த நபர், தற்போது இலங்கை கடற்படையில் பணியில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

சரியான முறையில் தயாரிக்கப்பட்டிராத இந்த கடல் வெடிகுண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மிதக்கவிடப்பட்டதாகவும், அது தமிழக கரையோரமாக தற்போது மதந்து கொண்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, தமிழக கரையோரத்தில் கடல், மற்றும் கடலோர பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக கரையோர நகரங்களில் கடலோர பாதுகாப்பு படையினர் தங்களது ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், வெடிபொருள் குறித்து ரெட் அலர்ட் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக கரையோரப்பகுதியில், 12 கடலோர காவல் நிலையங்களை சேர்ந்த 14 படகுகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று தகவல் உள்ளது.

கடலில் சந்தேகத்திற்கு இடமான மிதக்கும் பொருளை பார்த்தால், அதனை தொட்டு பார்க்கவோ, அல்லது பரிசோதிக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ள கடலோர பாதுகாப்பு பிரிவினர், தமிழகத்தின் சில பகுதிகளை சேர்ந்த மீனவர்களையும் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!