Monday, November 26, 2012

மும்பை பங்குச் சந்தைக்கு உலக அளவில் முதலிடம் : பட்டியலில் அதிக கம்பெனிகள்

மும்பை பங்குச் சந்தைக்கு உலக அளவில் முதலிடம் : பட்டியலில் அதிக கம்பெனிகள்




அதிக கம்பெனிகள் பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகள் வரிசையில், உலக அளவில் முதலிடத்தில் இந்தியா வின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் (பிஎஸ்இ) உள்ளது.

இது குறித்து, உலக பங்குச் சந்தைகள் சம்மேளனம் வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு: உலக அளவில் மும்பை பங்குச் சந்தையில்தான் அதிகமான கம்பெனிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த மாத நிலவரப்படி, மொத்தம் 5,174 கம்பெனிகள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 2வது இடத்தில் உள்ள கனடா நாட்டின் டிஎம்எக்ஸ் குரூப் சந்தையில் 3,964 நிறுவனங்களே பட்டியலிடப்பட்டுள்ளன.

அதே போல், இங்கிலா ந்து நாட்டின் லண்டன் பங்குச் சந்தை, அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தை(என்ஒய்எஸ்இ), நாஸ்டாக் பங்குச் சந்தை ஆகியவற்றின் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் எண்ணிக்கை, மும்பை பங்குச் சந்தையில் உள்ளதில் பாதியளவுதான். டிஎம்எக்ஸ் சந்தையில் 3,964, லண்டன் சந்தையில் 2,782, நாஸ்டாக் சந்தையில் 2,598, நியூயார்க் சந்தையில் 2,345 நிறுவனங்களே பட்டியலிட்டுள்ளன.

மும்பை சந்தையில் கடந்த அக்டோபரில் மட்டும் 11 புதிய கம்பெனிகள் பட்டியலிட்டுள்ளன. மும்பைக்கு அடுத்தபடியாக டிஎம்எக்ஸ், ஸ்பானிஷ் எக்சேஞ்ச், லண்டன் எஸ்இ குரூப், நாஸ்டாக், ஒஎம்எக்ஸ், நியூயார்க் எக்சேஞ்ச், டோக்கியோ எஸ்இ குரூப், ஆஸ்திரேலிய சந்தை, கொரியா சந்தை, இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. வெளிநாட்டு கம்பெனிகள் அதிகமாக பட்டியலிடப்பட்டுள்ள சந்தையில், லண்டன் சந்தை 583 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!