பத்ம பூஷண் விருது பெற்ற டாக்டருக்கு ஒரு நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கடமையில் அலட்சியமாக இருந்ததற்காக பத்ம பூஷண் விருது பெற்ற டாக்டருக்கு ஒரு நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல புற்றுநோய் நிபுணர் டாக்டர் பிரபுல்லா தேசாய் (80). முன்னாள் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி லீலாவதியின் மரணத்துக்கு காரணமாக இருந்¢ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இவருக்கு மும்பை ஐகோர்ட் ஒரு நாள் சிறை தண்டனையையும், ரூ.50,000 அபராதமும் வழங்கியது. லீலாவதி கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் டாக்டர் தேசாய் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லீலாவதியின் கணவர் பி.சி.சிங் 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி டாக்டர் தேசாய் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்தார். 1989ம் ஆண்டு பிப்ரவரி லீலாவதி 14 மாதங்கள் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட பின்னர் இறந்துவிட்டார். இந்த பிரச்னையில் டாக்டர் தேசாய் குற்றவாளிதான் என்று மாநில மருத்துவ கவுன்சில் அறிவித்தது. அதன் பின்னர் 1991ம் ஆண்டு போலீசார் தேசாய் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட், டாக்டர் தேசாய்க்கு ஒரு நாள் சிறைவாசமும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மும்பை ஐகோர்ட் சமீபத்தில் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து டாக்டர் தேசாய் ஒரு நாள் சிறைவாசத்தை அனுபவித்தார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!