Monday, November 26, 2012

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? மூட்டு வலி வருமாம்

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? மூட்டு வலி வருமாம்




ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூட்டு வலி பிரச்னை வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் பணியாற்றும் கால்வாசிக்கும் மேற்பட்டோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் உடல் பருமன் மற்றும் காலையில் இருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மூட்டு வலி வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வருகிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவதிப்படுகின்றனர்.

16 வயது முதல் 65 வயது வரையுள்ள 1,600 பேரிடம் கேட்டதில் சுமார் கால்வாசிக்கும் மேற்பட்டோர் தாங்கள் 2 ஆண்டுகளாக மூட்டு வலியுடன் வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அலுவலக மூட்டு நோய்க்கு இன்டர்நெட் சார்ந்த வேலை மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதிக எடையால் மூட்டு எலும்பு நொறுங்குவதை தாங்கள் பார்த்துள்ளதாக எலும்பியல் மருத்துவர் ரானன் பனிம் தெரிவித்துள்ளார். இப்படியே உடல் பருமன் அதிகரித்துக் கொண்டிருந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு தேவைப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!