Tuesday, November 27, 2012

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ஜப்தி

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ஜப்தி! பணம் செலுத்த 10 நாள் தவணை!!


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்கடர் ஆபீஸூக்கு ஏன் இந்தக் கதி?

ரெட்டியார் சத்திரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆதி திராவிடர்களுக்கு இலவச நிலம் வழங்குவதற்காக, கடந்த 1999-ம் ஆண்டு கோவிந்தசாமி மற்றும் உறவினர்களிடம் இருந்து 9 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது. நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் பேரில் உரிய தொகை வழங்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் மாவட்ட நிர்வாகம் தொகையை வழங்கவில்லை.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்ய இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இப்போது, பணத்தை வழங்க 10 நாட்கள் தவணை அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!