தினமும் 10 ஆயிரம் திருமணம் : டெல்லியில் 2 நாளாக கல்யாண வைபோகம்
தொடர்ந்து முகூர்த்த நாள் என்பதால், டெல்லியில் கடந்த 2 நாட்களில் 20 ஆயிரம் தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. இன்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணம் நடக்கிறது. டெல்லியில் 235 திருமண மண்டபங்கள் மற்றும் சமூதாய கூடங்கள் உள்ளன. கடந்த சனிக்கிழமை முகூர்த்த நாள் என்பதால், இந்த மண்டபங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்ட்டிருந்தன. இவை அனைத்திலும் திருமணம் நடந்தது என்று வடக்கு மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சியின் செய்தி தொடர்பாளர் யோகேந்திர மான் கூறினார்.
நேற்றும் முகூர்த்த நாள் என்பதால், இந்த மண்டபங்களில் திருமணங்கள் நிறைய நடந்தன. இன்றும் முகூர்த்த நாள் என்பதால், திருமணம் நடக்க உள்ளதாக யோகேந்திர மான் தெரிவித்தார். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணம் நடந்துள்ளது. இன்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணம் நடக்கும் என்று மான் தெரிவித்தார். இதனால், கடந்த 2 நாட்களாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!