Wednesday, November 28, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 2

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 2


"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…?

இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…? ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை. சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.
அவை என்ன தெரியுமா……..?

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.

அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.
என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.

உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படம் மேலே உள்ளது பாருங்கள்

படத்தை 2நிமிஷம் பாருங்க ஏதாவது புரியுதா ?
இந்த படத்தில் உள்ளது ராக்கெட் ,அந்த மனிதன் விண்வெளிக்கு செல்லும் மனிதன் என்று சொன்னால் நம்புவீர்களா ? காட்டுவாசி காலத்துல ராக்கெட் ஆ,விண்வெளிக்கா னு புருவத்த உயர்த்தி மறுபடியும் படத்த பாக்க போறீங்களா ? இன்னும் சில படங்கள் போடுறேன் நம்ப முடியுதானு பாருங்க







இது இப்படியும் இருந்திருக்கலாம் னு கற்பனையா வரஞ்ச படம்


மத்திய அமெரிக்கா


  
மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இல்லப்பா ,இது வேற ஏதோ சித்திரம் நீதான் ராக்கெட் ,அது இது ன்னு குழப்புரன்னு மனசு சொல்லுதா?
உங்களப்போலவே இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.இது ராக்கெட் ஆக இருக்க முடியாது என்கிற அவர்களின் நம்பிக்கையை தகர்த்தது அப்படி என்னதான் கிடைத்தன..?


அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட ‘பிரமிட்’ (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன


அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.





அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்” என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.






இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்

‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்’ என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்க

பாகம் 3


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!