Friday, November 30, 2012

சிரியா முழுவதிலும் இன்டர்நெட் கட்! உக்கிரமான தாக்குதல் நடக்கலாம் என அச்சம்!!

சிரியா முழுவதிலும் இன்டர்நெட் கட்! உக்கிரமான தாக்குதல் நடக்கலாம் என அச்சம்!!



நேற்று இரவு முதல் சிரியா முழுவதிலும் இன்டர் நெட் சேவையை நிறுத்தியது அந்நாட்டு அரசு. இதையடுத்து, கடும் பதட்ட நிலை அங்கு தோன்றியுள்ளது. காரணம், ராணுவம் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காகவே இன்டர் நெட் நிறுத்தப்பட்டுள்ளது என வெளிநாடுகளில் உள்ள சிரிய போராளிப் படை செயல்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

இதுவரை காலமும், சிரியாவில் மக்களுக்கு எதிராக ராணுவம் செய்த தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் வெளியுலகை எட்டியதன் காரணமே, இன்டர்நெட் மூலம் அவை வெளிவந்ததுதான். அரசு கடுமையான செய்தித் தடையை அமல் படுத்தியுள்ள போதிலும், போராளிப் படையினர் அங்கு நடப்பவற்றை தமது வெளிநாட்டு செயல்பாட்டாளர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து வந்தனர்.

அரசு விமானப்படை குண்டு வீசிவிட்டு சென்ற அரை மணி நேரத்திலேயே, மக்கள் அழிவு தொடர்பான போட்டோக்கள் சகிதம் தனவல் வெளியுலகை எட்டியது. இதனாலேயே உலக நாடுகளின் ஆதரவு போராளி அமைப்பினருக்கு ஏற்பட்டது. அனைத்தும் இன்டர்நெட் மூலமாகவே நடந்தன.

நேற்றிரவு, இன்டர்நெட் நாடு முழுவதிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

ராணுவம் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்போது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு விபரங்கள் வெளியே தெரியாதவாறு, இன்டர் நெட்டை நிறுத்தியதன் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, இன்டர் நெட் நிறுத்தப்பட்டு சுமார் 10 மணி நேரம் ஆகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!