தாமதமாக லக்கேஜ் டெலிவரி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ.2.2 லட்சம் அபராதம் விதிப்பு
உடைமையை தாமதமாக ஒப்படைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், பயணிக்கு ரூ.2.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யசோதாவர்தன் குப்தா. இவரது மகளின் திருமணம் லண்டனில் நடைபெற்றது.இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திருமணத்திற்கு தேவையான சடங்கு பொருட்கள் மற்றும் துணிமணிகள் உட்பட ஏராளமான பொருட்களு டன் கடந்த 2006 நவம்பர் 20ம் தேதி டெல்லியிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் யசோதாவர்தன் சென்றார்.லண்டனில் தரையிறங்கிய பின்னர் தனது உடைமைகளை பார்த்தபோது, ஒரு பண்டல் காணாமல் போனது தெரிய வந்தது. அந்த பண்டலில்தான் திருமணத்திற்கு தேவையான அனைத்து சடங்கு பொருட்களும் இருந்தன.காணாமல் போன பண்டலை 12 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து ஒப்படைப்பதாக யசோதா வர்தனிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தனது மகள் வீட்டுக்கு யசோதாவர்த்ன் சென்றார்.
ஆனால் குறித்த நேரத்திற்கு பொருட்கள் கிடைக்காததால், திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் லண்டனில் கூடுதல் விலை கொடுத்து யசோதாவர்தன் வாங்கினார். அதன் பின்னர் சுமார் 75 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடைமைகளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒப்படைத்தது.திருமணத்திற்கு பிறகு தாயகம் திரும்பிய அவர், டெல்லி தென் மேற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் யசோதாவர்தன் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி நரேந்தரகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வார்ஷா ஒப்பந்தம் மற்றும் தங்களது நிறுவனத்தின் விதிமுறைகளின்படி லக்கேஜின் எடைக்கு தகுந்தாற்போல் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வாதத்தை தள்ளுபடி செய்து நீதிபதி நரேந்தரகுமார் அளித்த உத்தரவில், விமான நிறுவன அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளின்படி காணாமல் போன யசோதாவர்தன் உடைமைகள் 12 மணி நேரத்திற்குள் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் கூடுதல் செலவு செய்தது தெளிவாக தெரிகிறது. எனவே அவருக்கு ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக ரூ.2 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.20 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க தீர்ப்பளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!