வங்கக் கடலில் காற்றழுத்தம்- தென் மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் ஓரிரு நாட்களில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 16-ந்தேதி முதல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்திருக்கிறது. நிலம் புயலுக்குப் பிறகு ஓரிருமுறை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டாலும் அது புயலாக உருமாறவில்லை. இதனால் போதுமான மழையும் இல்லை. இந்நிலையில் இந்த காற்றழுத்ததாழ்வு நிலையினாலாவது மழை கிடைக்குமா? என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!