Friday, December 14, 2012

இந்தியாவில் டாப் பணக்காரர்கள்..

இந்தியாவில் டாப் பணக்காரர்கள்..



இந்தியாவின் பணக்காரர்கள் யார் என்ற பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹூருன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் டாப் பணக்காரர்கள் யார்? யார்? அந்த சர்வே விவரம்.... இதில் பணக்கார பெண்மணிகளின் விவரமும் அடங்கியிருக்கிறது.



முதலிடத்தில் முகேஷ் அம்பானி 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 19.3 பில்லியன் அமெரிக்க டாலர்! அம்பானிக்கு அடுத்தது யார்?




லண்டன் வாழ் இந்தியர் மிட்டல் 

முகேஷ் அம்பானியையடுத்து இந்தியாவின் 2-வது மிகப் பெரிய பணக்காரர்தான் லண்டன் வாழ் இந்தியரான தொழிலதிபர் எல்.என்.மிட்டல்.! மிட்டலோட சொத்து மதிப்பு எவ்வளவு என்கிறீர்களா? மொத்தம் 16.9 பில்லியன் அமெரிக்க டாலர்




அடுத்த டாப் அசிம் பிரேம்ஜி...
முகேஷ் அம்பானி, மிட்டல் ஆகியோரை அடுத்து இந்தியாவின் டாப் பணக்காரர்கள் யார்?

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி (12.3 பில்லியன் டாலர்),

சன் பார்மசூட்டிகல்ஸின் திலிப் சங்வி( 8.5 பில்லியன் டாலர்),

பல்லோன்ஜி (7.9 பில்லியன் டாலர்),

எஸ்ஸார் குழுமத்தின் சாஷி அண்ட் ரவி ரூயா (7.2 பில்லியன் டாலர்),.

கோத்ரெஜ் குழுமத்தின் அதி கோத்ரெஸ் (6.9 பில்லியன் டாலர்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர்!





லிஸ்ட்டில் சர்ச்சைக்குரிய டி.எல்.எப்.

சோனியாவின் மருமகன் வத்ரா வகையாக மாட்டிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால் சிங்கும் இந்த டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 6.3 பில்லியன் டாலர்.

இவருக்கு அடுத்ததாக குமாரமங்கலம் பிர்லா( 5.8 பில்லியன் டாலர்),

ஹெச்.சி.எல். சிவ் நாடார் (5.7 பில்லியன் டாலர்),

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் (5.7 பில்லியன் டாலர்) ஆகியோரும் இடம் பிடித்திருக்கின்றன்ர்.



இந்தியாவின் பணக்கார பெண்மணி
இந்தியாவின் பணக்கார பெண்கள் யார் என்ற விவரமும் வெளியிடப்பட்டிருக்கிறது. பணக்கார பெண்மணிகளில் அவர் இடம்பிடித்திருப்பரா? இவர் இடம்பிடித்திருப்பாரா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த பெண்மணியும் இந்தப் பட்டியலில் இல்லை...



பணக்கார பெண் சாவித்ரி ஜிண்டால்

இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார பெண்களில் சாவித்ரி ஜிண்டாலுக்கு முதலிடம். அவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர். அவருக்கு அடுத்த இடம்

பென்னெட் குழுமத்தின் இந்து ஜெயின். இவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர்.

அடுத்த இடத்தில் இருப்பவர் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு அஹா. இவரது சொத்து மதிப்பு 690 மில்லியன் டாலர்.

பைகோன் நிறுவனத்தின் கிரன் மஜூம்தாரின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர்.

இந்துஸ்தான் டைம்சின் சோஷபா பார்தியாவின் சொத்து மதிப்பு 490 மில்லியன் டாலர்.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!