விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: ஜெசிந்தாவை பேட்டி கண்டவர்களின் கதை
ஊடக உலகில் பல மாற்றங்களிற்கு ஒரு மரணம் வழிவகுத்துச் சென்றதென்றால் அது இலண்டனில் இடம்பெற்ற ஜெசிந்தாவினுடைய மரணமாகத் தான் இருக்கும். ஊடகதர்மம் பற்றிய பல கருத்து வாதங்களை உருவாக்கிய இந்த மரணம் குறித்த விசாரணைகள் இன்னமும் முடியவில்லை.
இருந்தபோதும் இந்தப் பேட்டியை எடுத்த இரண்டு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் நேற்றைய தினம் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியை கண்ணீரோடு வழங்கினர். இந்த குரலை மாற்றி வைத்தியசாலைக்கு தொலைபேசி எடுப்பது என்ற நிகழ்வு ஒரு திட்டமிடப்படாதது என்று கூறினர்.
இருந்தபோதும் இவர்கள் இருவரும் மேற்படி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் என்ற பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதுடன், இவர்களிற்கு தொழில்நுட்ப ரீதியில் உதவிய ஏனைய கலைஞர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பி நகரைச் சேர்ந்த ஜெசிந்தாவின் முடிவு லண்டன் பொலிசாரினால் அவுஸ்திரேயா வரை விசாரிக்கப்படுவதற்கு இந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தான் காரணம். அவர்களே இப்படியான ஒரு விபரீதம் இடம்பெறும் என்பதை தாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லையென்று தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியரின் குடும்பத்துக்கு இழப்பீடு
பிரிட்டனில் மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியர் ஜெஸிந்தாவின் குடும்பத்துக்கு ரூ.2.84 கோடி இழப்பீடு வழங்க போவதாக அவுஸ்திரேலிய வானொலி நிறுவனம் அறிவித்துள்ளது.வானொலி அறிவிப்பாளர்களால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமது அறிவிப்பாளர்கள் செய்த தவறுக்குப் பொறுப்பேற்று செவிலியர் ஜெசிந்தாவின் குடும்பத்துக்கு ரூ.2.84 கோடி இழப்பீடு வழங்கப் போவதாக அவுஸ்திரேலிய வானொலி நிறுவனமான சதர்ன் கிராஸ் ஆஸ்டரியோ அறிவித்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டு இறுதிவரை விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும் இந்தக் குடும்பத்துக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
ஜெசிந்தாவின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள இந்நிறுவனம் சம்பந்தப்பட்ட 2 அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதையும் நிறுத்தி வைத்துள்ளது.
மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியரின் உடல் அடக்கம்
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தவர் ஜெசிந்தா சல்தானா(வயது 46).
பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக மருத்துவமனையில் கேத் மிடில்டன் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையத்தின் தொகுப்பாளர்கள் இருவர் ராணி எலிசபெத் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் பேசி, கேத் மிடில்டனுக்கு அளித்த மருத்துவ விவரங்களை பெற்று ஒலிபரப்பினர்.
இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி மருத்துவமனைக்கு அருகில் நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்பதை விவரிக்க முடியவில்லை என்று லண்டன் பொலிசார் கூறுகின்றனர்.
மர்ம மரணம் அடைந்த ஜெசிந்தா இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இதுகுறித்து அவருடைய கணவர் பெனடிக்ட் பர்போசா, என் மனைவி மர்ம மரணத்தால் முற்றிலும் நொறுங்கி போயிருக்கிறேன்.
அவரது உடல் கர்நாடக மாநிலத்தின் ஷிர்வாவில் அடக்கம் செய்யப்படும் என்று பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!