நீது சந்திராவுக்கு கொரிய அரசின் கௌரவம்
நடிகை நீது சந்திராவுக்கு தற்காப்பு கலைக்கான கருப்பு பெல்ட்டை கொரிய அரசு வழங்கவிருக்கிறது.
தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா.
தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகும் ஆதிபகவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கொரிய தற்காப்பு கலையான டேக்வாண்டோவை கற்றுள்ள நீது சந்திரா, இதில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை ஏற்கனவே வாங்கியுள்ளார்.
தற்போது நான்காவது ப்ளாக் பெல்ட் வாங்க உள்ளார், இதற்கான விழா வருகிற 13ஆம் திகதி டெல்லியில் நடக்கிறது.
இவ்விழாவில் கொரிய அரசு நான்காவது ப்ளாக் பெல்ட்டை நீதுவுக்கு வழங்கி கௌரவிக்க உள்ளது.
இதுபற்றி நீது சந்திரா கூறுகையில், என் குடும்பத்தில் நான் மட்டுமே விளையாட்டுடன் கல்வியையும் சேர்த்துக் கற்றேன்.
மற்றவர்களை போல நானும் பொறியியல், மருத்துவம் என்று படித்திருந்தால் இதுபோன்ற விருதுகளை இழக்க வேண்டி இருந்திருக்கும்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தற்காப்பு கலையில் சாதிக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
நான் இந்த அளவு சாதித்ததற்கு என் அம்மாதான் காரணம். அவர் என்னை உற்சாகப்படுத்தி இருக்காவிட்டால் இது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கொரிய அரசின் இந்த பெருமைக்குரிய பெல்டை வாங்கிய ஒரே இந்திய பெண் நீது சந்திரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!