அமெரிக்க இராணுவத்தின் மிக-இரகசியமான விண்வெளி ஓடம் மூன்றாவது பரீட்சார்த்தப் பறப்பில்
அமெரிக்க இராணுவத்தின் புரட்சிகளில் மற்றுமொறு மைல்கள் எனக் கருதப்படும் சிறிய விண்வெளி ஓடம் மூன்றாவது பரீட்சார்த்த பயணத்தை விண்வெளிக்கு மேற்கொண்டுள்ளது. இராணுவ மற்றும் விஞ்ஞான வெற்றியெனக் கருதப்படும் இந்த ஓடம் அற்லஸ் வீ என்ற ஒரு விண்வெளிச் செலுத்தியின் உதவியுடன் இன்று விண்ணிற்கு ஏவப்பட்டது.
எக்ஸ் 37பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஓடம் முதற்பறப்பில் சுமார் ஏழு மாத காலத்தை விண்வெளியில் செலவழித்திருந்தது. இரண்டாவது பறப்பில் சுமார் ஒருவருடத்தை விண்வெளியில் செலவளித்திருந்தது. தற்போதும் ஆட்களில்லாமல் அனுப்பப்படும் இந்த விண்வெளி ஓடம் எந்த நோக்கத்திற்காக அணுப்பப்படுகிறது என்பது தெரியவில்லையாயினும்,
விண்வெளியில் நிலைகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான செய்மதிகளை கண்காணிக்கும் உளவுபார்க்கும் சென்சர் ஆய்வை மேற்கொள்ளவே செல்கிறது என ஹேஸ்யம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 மீற்றர் நீளமும் முந்தைய விண்கலங்களின் அளவில் நான்கில் ஒரு பங்கேயுள்ளதுமான இந்த விண்கலம் மனிதர்களுடன் விண்வெளிக்குச் சென்று வரும் வடிவமைப்பைக் கொண்டுள்ளதாயினும் இப்போதைய பறப்புக்களில் விண்வெளி வீரர்கள் யாரும் செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கலம் பாரம்பரிய விண்கலத்தைப் போலல்லாது சிறிய காலத் தயாரிப்புடன் உடணயே விண்வெளிக்குச் செலுத்தக்கூடியதாகவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!