Wednesday, December 12, 2012

தப்புச் செய்வதற்கு வெட்கப்படாத திருமணமான பெண்கள் – கலாச்சாரம் மாறுகிறதா?

தப்புச் செய்வதற்கு வெட்கப்படாத திருமணமான பெண்கள் – வட அமெரிக்கக் கலாச்சாரம் மாறுகிறதா?



40 வயதான போலா 37 வயதான ஜில் இவர்கள் இருவருமே 60 வயதான அமெரிக்காவின் “நான்கு நட்சத்திரத்” தளபதியின் சாம்ராஜ்யத்திற்கே முடிவுகட்டிய மாற்றாறின் திருமதிகள். போலாவிற்கு இரண்டு பிள்ளைகள், ஜில்லிற்கு மூன்று பிள்ளைகள். இருவருக்குமே ஆரம்பர வாழ்க்கை இணைபிரியாத கணவர்கள். இவ்வளவற்றையும் விலை வைத்தே இருவரும் இந்த 60 வயது நாயகனின் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

இதுவே இப்போது பல கேள்விகளை வட அமெரிக்காவில் எழுப்பியுள்ளது. முன்பெல்லாம் திருமணமான ஆண்கள் இளம்பெண்களுடன் தொடர்பு கொள்ளவதே செய்தியாக இருந்து வந்தன. ஆனால் இப்போது பந்தாவிற்காகவும், அந்தஸ்தத்திற்காகவும், கமிராக்களின் வெளிச்சம் தங்களின் மீது படவேண்டும் என்பதற்காகவும் திருமணமான பெண்களே வயதான “கௌரவமான” ஆண்களை வலைபோட்டுப் பிடிக்கிறார்கள்.


நான்கு நட்சத்திரத் தளபதி டேவிட் பெட்ராஸ் கூட மண பந்தத்தில் இணைந்து 37 வருடங்கள். மனைவியுடன் எவ்வளவு பந்தம் என்பதை தனது பேட்டிகளிலெல்லாம் தெரிவித்த்திருந்தவர். அவருக்கே புதிய பாடம் கற்பித்த இந்த மாற்றாறின் திருமதிகளின் செயல் புதிய கலாச்சார மாற்றம் வட அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாக என்ற விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

இதுகுறித்து குடும்பநல அறிவுரைஞர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இப்போது இப்படி தனது கணவருடன் வாழ்ந்து கொண்டே மாற்றானுடன் தொடர்பு கொள்வது ஒருவகை “விவாகரத்தாகவே” கருதப்பட வேண்டியது என்று தெரிவித்தார். கௌரவத்தைப் பேண குடும்பமாக வாழ்ந்தாலும், இருவருமே வேறு திசைகளிலேயே பயணிக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது என்றார்.

திருமண பந்தத்தை விலைபேசுபொருளாக வைத்து இவ்வாறு பெண்கள் துணிந்து செயற்படுவது குடும்பத்தைப் பிரிக்கும் பிள்ளைகளில் வாழ்க்கையைச் சீரழிக்கும் என்பதையெல்லாம் கருத்திலெடுக்காது இந்தப் பெண்கள் துணிவதற்கு காரணமே அவர்கள் கணவரை விடவும் புகழான ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்பதேயாகும்.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒரு உளவியளாலர் பெண்கள் சமூகத்தின் முன்மாதிரிகள். அவர்கள் தான் சமூகக்கட்டுப்பாட்டை, குடும்ப ஒழுக்கத்தை பேணி உறவுப்பாலத்தை வளப்பவர்கள். இந்த மாதிரி இரகசியத் தொடர்பால்கள் இதர திருமண முடித்த ஆண்களையும் ஒரு முறை சந்தேகம் கொள்ள வைத்தாலும் வைக்கும் எனத் தெரிவித்தார்.

கௌரவமான அல்லது சமூக அந்தஸ்த்துடன் இருக்கும் ஆண்களையே இவ்வாறு பெண்கள் குறிவைப்பது அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் ஒரு தற்காலிகப் பெருமிதத்தை அனுபவிக்கவே என்பதேயாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!