மாலியில் இராணுவத்தினர் அட்டூழியம்: பிரதமரை கைது செய்தனர்
ஆப்ரிக்க நாடான மாலியின் பிரதமரை இராணுவத்தினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் சேக்மோடிபோடியரா.
இவர் மாலியின் தலைநகர் பமோகாவில் தனது வீட்டில் இருந்த போது, அதிரடியாக 20 இராணுவ வீரர்கள் நுழைந்தனர். அதன் பின் பிரதமரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர்.
நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் வகையில் பிரதமரை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதற்கு முன்பாக மாலியில் புரட்சியில் ஈடுபட்ட அமேதோசாங்கோ என்பவரின் உத்தரவின் பேரிலேயே கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிரதமர் டேப் செய்த செய்தி ஒன்றை டெலிவிஷன் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். அது உடனடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆனால் இதுபற்றி அறிந்ததும் இராணுவத்தினர் டெலிவிஷன் நிலையத்திற்கு சென்று அந்த டேப்பை கைப்பற்றினார்கள், டெலிவிஷன் நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தன்னுடைய பிரதமர் பதவியை சேக்மோடிபோடியரா ராஜினாமா செய்துள்ளார்.
பிரபல விஞ்ஞானி சேக்மோடிபோடியரா, அமெரிக்கா நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!