Wednesday, December 12, 2012

கடற்பசுவின் மேல் சவாரி: கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பெண்

கடற்பசுவின் மேல் சவாரி: கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பெண்


அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் கடற்பசு ஒன்றின் மேல் சவாரி செய்து புகைப்படம் எடுத்த பெண்ணொருவரு மீது புளோரிடாவின் சட்டங்களை மீறியதாக குற்றஞ்சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

புளோரிடாவில் பாதுகாக்கப்பட்ட வேண்டிய உயிரினங்களில் ஒன்றான கடற்பசுவிற்கு தொந்தரவு கொடுத்தல், அதனைத் தாக்குவது, அதன் இருப்பிற்கு இடையூறு விளைவிப்பது போன்றவை சட்டவிரோத செயல்களாக சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுளளன.



இந்நிலையில், இச் சட்டத்தைப் பற்றி அறிந்திராத மேற்படி பெண் கடற்பசுவின் மேல் படுத்திருந்து சவாரி செய்த தனது புகைப்படத்தைப் இணையப்பதிப்பில் ஏற்ற அது ஊடகங்களில் வெளியாகிறது.

இந் நிலையில் இந்தப் பெண் யாரென பொலிசார் தேட, அவராகவே தன்னை அறிமுகப்படுத்தி தான் பணிபுரியும் இடத்தையும் தெரிவிக்க அங்கு சென்ற பொலிசார் அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.


இந்த கடற்பசுக்கள் தொடர்பான சட்டவரைவு தனக்கு தெரியாது என்ற வாதத்தை அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட போதும் வழக்கிற்கான தீர்ப்பை நீதிமன்றமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்தாவரங்களையே உணவாக்கும் கடற்பசுக்கள் 12 அடி நீளம் வரை வளரும் என்பதோடு சுமார் 1,800 இறாத்தல் வரை எடையுடையவையாக வளரும். இரண்டு வருடங்களிற்கு ஒரு முறை குட்டியீனும் இவ்வினம் ஒரு தடவையில் ஒரு குட்டியை ஈனும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!