''சூப்பர் ஜூபிடர்'': வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
ஹவாய் தீவுகளில் உள்ள உலகின் மிக சக்தி வாய்ந்த விண்ணியல் தொலைநோக்கி மூலம் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சைஸ் நமது ஜூபிடர் (தமிழில் வியாழன் அல்லது குரு) கிரகத்தைப் போல 13 மடங்காகும். நமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள் ஜூபிடர் தான் என்பது உங்களுக்குத் தெரியும் தானே..
கப்பா ஆட்ரோமெடா பி..
இந்த புதிய கிரகம் கப்பா ஆட்ரோமெடா பி (Kappa Adromedae b) என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது. பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் அளவைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியே வாயைப் பிளந்தபடி இதற்கு "super-Jupiter" என்று பெயரும் சூட்டியுள்ளனர்.
இந்த நட்சத்திரம் சூரியனை விட 2.5 மடங்கு பெரிது..
சூப்பர் ஜூபிடர் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரமும் மெகா சைஸ் தான். இதன் அளவு நமது சூரியனை விட இரண்டரை மடங்காகும். ஆனால், இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள் தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஜூபிட்டரின் வயதும் குறைவானதாகவே இருக்கும் என்று தெரிகிறது. நமது சூரியனின் வயது 5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்த கிரகத்துக்கும் அது சுற்றிக் கொண்டிருக்கும் நடத்திரத்துக்கும் இடையிலான தூரம் கூட மிக மிக அதிகமாக உள்ளது. இதுவும் விஞ்ஞானிகளை தலை சுற்ற வைத்துள்ளது.
மிக மிக நீண்ட தூரம்...
வழக்கமாக ஒரு நடத்திரத்தை (சூரியன்) தான் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் தான் அதைச் சுற்றி வரும் கிரகங்களை கண்டுபிடிப்பார்கள். ஆனால், இங்கு முதலில் சூப்பர் ஜூபிடர் தான் தொலைநோக்கியில் சிக்கியது. இது தனியாக மிதந்து கொண்டிருக்கிறதே, இது சுற்றி வரும் சூரியன் எங்கே என்று நீண்ட தேடலுக்குப் பின்னரே கப்பா ஆட்ரோமெடா பி சூரியன் சிக்கியது. இரண்டுக்கும் இடையே உள்ள மிக மிக நீண்ட தூரம் தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.
ஜப்பானிய தொலைநோக்கி..
அமெரிக்காவின் ஹவாய் தீவில் மெளனா கியா மலையில் ஜப்பான் அமைத்த சுபாரு தொலைநோக்கி தான் இந்த புதிய கிரகத்தையும் அதன் சூரியனையும் படம் பிடித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!