அது குரங்கல்ல… மகனைப் போலவே வளர்த்தேன்… என்னிடமே தந்துவிடுங்கள். ரொறன்ரோப் பெண்ணின் உருக்கமான வேண்டுகோள்.
ஐக்கியா என்ற அங்காடியின் வாகணத்தரிப்பிடத்தில் தவறவிடப்பட்டு வட அமெரிக்காவினது ஊடகங்களையெல்லாம் தன்வசம் இழுத்து வைத்திருக்கும் டார்வின் எனப் பெயரிடப்பட்ட குரங்குக்குட்டியை தன்னிடமே மீண்டும் தருமாறு அதன் உரிமையாளர் உளமுருகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உரிமையாளர் மேற்படி அங்காடிக்கு சென்றிருந்த சமயம் காரிலிருந்து தப்பி வெளியே வந்த மேற்படி குரங்குக்குட்டி வனவிலங்குப் பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அதுவரை உரிமையாளருக்கு நடந்தது ஏதுமே தெரியாது. எனினும் வனவிலங்கப் பாதுகாப்பு பிரிவிற்கு குரங்கை மீட்கச் சென்ற அவரிற்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு குரங்கு பறிமுதல் செய்யப்பட்டது.
இந் நிலையில் தற்போது உலகெங்குமே யூரியூப் மூலம் வியாபித்திருக்கும் டார்வின் என்ற இக் குரங்கு வீட்டில் வளர்ந்த விதம் தொடர்பான வீடியோக்கள் அது மிகவும் செல்லப்பிள்ளையாவே வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன.
இந்நிலையில் அந்தக் குரங்குக்குட்டியை ஒரு மகன் போலவே வளர்த்தேன், தயவு செய்து அதனை ஒரு தடவையாவது பார்க்க அனுமதியுங்கள் என அதன் உரிமையாளர் தற்போது குரங்குக்குட்டியுள்ள சரணாலயத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்கள்.
இருந்தபோதும் தான் மகனைப் போல வளர்த்த இந்தக் குரங்குக் குட்டியைப் மீளப்பெறாமல் விடுவதில்லையெனக் கங்கணம் கட்டிநிற்கின்றார் வழக்கறிஞரான மேற்படி பெண்மணி.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!