Wednesday, December 12, 2012

இந்த குருவியை கண்டால் லண்டனில் உள்ளவர்களுக்கு பயம் !

இந்த குருவியை கண்டால் லண்டனில் உள்ளவர்களுக்கு பயம் !




அட எதை தான் பார்த்து பயப்பிடுவது என்று ஒரு வரை முறையில்லையா என்று நீங்கள் கேட்க்கலாம். ஒரு பாம்பைப் பார்த்து, இல்லை என்றால் ஒரு புலியைப் பார்த்து பயப்பிடலாம். ஆனால் குருவி, கொக்கைப் பார்த்து எல்லாமா பயப்பிட முடியும் ? என்று நினைக்கதோணும். ஆனால் இங்கே நீங்கள் படத்தில் பார்க்கும் குருவி ஸ்கண்டி- நேவிய நாடுகளில் வசிக்கும் குருவி. நோர்வே, ஸ்வீடன், போன்ற கடும் குளிர் காலநிலை நிலவும் நாடுகளில் இக் குருவி வசிக்கிறது. குறிப்பாக இந் நாடுகளில் உயர் அழுத்தம் ஏற்பட்டால், அங்கே இருக்கும் குளிர் காற்று அப்படியே தாழ் அமுக்கம் ஏற்படும் நாடுகளுக்குச் சென்றுவிடும். தற்போது இதேபோன்றதொரு கால நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து, ஸ்கண்டி நேவிய நாடுகளில் உயர் அழுத்தம் ஏற்பட இருக்கிறது. மற்றும் பிரிட்டனில் தாழமுக்கம் ஏற்பட இருக்கிறது. எனவே அந் நாட்டல் உள்ள குளிர் அப்படியே பிரித்தானியாவுக்கு நகரவுள்ளது என்று, கால நிலை அவதான நிலையம் ஏற்கனவே கூறிவிட்டது.

ஆனால் அதற்கும் இக் குருவிக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா ? அட இந்தக் குருவி கடும் குளிரில் இருந்து பழக்கப்பட்டு விட்டது. கொஞ்சம் குளிர் குறைஞ்சாலும் அது தாங்காது. தற்போது ஏற்பட்டிருக்கும் கால நிலை மாற்றத்தை இது நன்றாக உணர்ந்துள்ளது. ஸ்கண்டி நேவிய நாடுகளில் இருந்து குளிர் காற்று லண்டன் நோக்கி நகரும் என்று, இக் குருவிக்கு நன்றாகத் தெரியும். ஏன் எனில் தற்போது காற்று நகர ஆரம்பித்துவிட்டது. எனவே குளிர் காற்று நகரும் திசையில் இவை பறந்து தற்போது லண்டன் வந்துவிட்டன. இவ்வகையான குருவிகள் பலவற்றை லண்டனில் தற்போது காணக்கூடியதாக உள்ளதாக, பறவைகளை அவதானிக்கும், அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வகையான குருவிகள், லண்டன் வந்தால், கூடவே குளிர் காலநிலையைக் கூடவே கொண்டுவரும் என்று, முதியவர்கள் சொல்வார்களாம். விஞ்ஞானிகள் சொல்வது ஒருபுறம் இருக்க, முதியவர்களிடமும் வயதானர்களிடம் மிகுந்த அனுபவம் இருக்கிறது என்பது தான் முக்கியமான விடையம் இல்லையா ?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!