Monday, October 8, 2012

இலங்கையை அச்சுறுத்தும் இயற்கையின் சீற்றம்

இலங்கையை அச்சுறுத்தும் இயற்கையின் சீற்றம்




இலங்கையில் என்றுமில்லாத  அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்தவாரம் முப்பதாண்டு இல்லாத வகையில், அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்தவாரம் வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பொலன்னறுவ மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியது.

அனுராதபுர, பொலன்னறுவ, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார்.

மலையகத்திலும் வெப்பநிலை சிறிதளவு அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.

அதேவேளை, கொழும்பில் சராசரி வெப்பநிலையான, 31 பாகை செல்சியசே நிலவுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!