அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் மாசு
அண்டார்டிக் பெருங்கடல் பகுதி மிகவும் அதிகமான கவலை அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் மாசடைந்திருப்பதை அங்கு சென்ற தனியார் ஆராய்ச்சிக் குழு ஒன்று கண்டறிந்திருக்கிறது.
ஒரு சதுர கிலோமிட்டர் பரப்பளவுக்கு சுமார் 40,000 பிளாஸ்டிக் கழிவுத் துகள்கள் வரை மிதந்துகொண்டிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனர்.
இந்தக் கழிவு, இயற்கையாகக் கரைய முடியாதது என்று கூறும் அவர்கள் பல நூறாயிரம் ஆண்டுகள் வரை இந்தத் துகள்கள் கடலிலேயே தங்கியிருக்கும் என்றும், கடைசியாக அவை உணவுச் சங்கிலித்தொடரில் சேர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஆராய்ச்சிக்குழுவினர் ஒன்றரை மிலியன் நுண்ணுயிர் இனங்களையும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதியில் கண்டு பதிவு செய்திருக்கிறார்கள். இவை அங்கு இருப்பதாக நம்பப்பட்ட நுண்ணுயிரினங்களின் எண்ணிக்கையை விட மிகவும் அதிகம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!