ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..
என்னிக்காவது ஒரு நாள் வரும் தலைவலி சாதாரணமானது. மாசத்துல 15 நாளைக்கும் மேல, 3 முதல் 4 மணி நேரத்துக்கு, தொடர்ந்து 3 மாசங்களுக்கு தலைவலி வந்தா, அது நாள்பட்ட தலைவலி. இதுல மைக்ரேன்னு சொல்ற ஒற்றைத் தலைவலி, மன உளைச்சலால உண்டாகிற டென்ஷன் தலைவலி, தினமும் வரும் தொடர் தலைவலி, ஒரு பக்கம் வரும் ஹெமிக்ரேனியா தலைவலினு நிறைய உண்டு.
பலரையும் பாடாகப் படுத்தறது மைக்ரேனும், டென்ஷன் தலைவலியும்தான்.ஒற்றைத் தலைவலிங்கிறது ஒரு பக்கம் ஆரம்பிச்சு, அப்புறம் ரெண்டு பக்கமும் பரவும். விண்... விண் னு தெறிக்கும். சாதாரணமா பண்ற வேலைகள் கூட வலியை அதிகமாக்கும். வாந்தி இருக்கும். சத்தமும், வெளிச்சமும் வலியை அதிகப்படுத்தும். வாசனையான பொருட்கள் தலைவலியை உண்டாக்கிறது.
மைக்ரேனுக்கான ஆரம்ப அறிகுறிகள்.
டென்ஷன் தலைவலிங்கிறது சின்னக் குழந்தைலேருந்து, பெரியவங்க வரைக்கும் வரக்கூடியது. தலையோட ரெண்டு பக்கங்கள்ல அல்லது தலை முழுக்க வலிக்கும். பாரமா இருக்கும். வேலை செய்தாலும், செய்யாட்டாலும் வலி இருக்கும். வாந்தி இருக்காது. சத்தமும், வெளிச்சமும் வலியை அதிகப்படுத்தாது.
மூணாவதா சொன்ன ஹெமிக்ரேனியால தொடர்ச்சியான வலியோட... கூடவே கண் எரிச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகறதெல்லாம் இருக்கும்.
என்னிக்கோ வர்ற சாதா வலிக்கு, நல்ல தூக்கம், வலி நிவாரண மாத்திரைகள், நிம்மதியான சூழல்னு சின்னச் சின்ன விஷயங்களே குணம் தரும்.
ஆனா, வாரத்துல 2 முறைக்கு மேல வலிச்சாலோ, எல்லா நாளும் வலி நிவாரண மாத்திரை தேவைப்பட்டாலோ, டாக்டர் கொடுத்ததைவிட, அதிக மாத்திரை தேவைப்பட்டாலோ, திடீர்னு தலைவலி அதிகமானாலோ, டாக்டரை பார்க்க வேண்டியது அவசியம். திடீர்னு ரொம்ப அதிகரிக்கிற வலி, கூடவே காய்ச்சல், வலிப்பு, பார்வைக்கோளாறு, பேச்சுக் கோளாறு, கழுத்து விரைப்புத் தன்மையெல்லாம் இருந்தா, அது மிக ஆபத்தான தலைவலிக்கான அறிகுறிகள்னு உணர்ந்து, உடனடியா தீவிர சிகிச்சை எடுத்துக்கணும்.
பதப்படுத்தப் பட்ட உணவுகள், இனிப்புகள், ஏரியேட்டட் பானங்கள், எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து, மன உளைச்சல் இல்லாம இருக்கிறது மூலமா தலைவலியைத் தவிர்க்கலாம்.. என்கிறார் குமார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!