Friday, October 12, 2012

2 வயது குழந்தைக்கு விஸ்கி சப்ளை

2 வயது குழந்தைக்கு விஸ்கி சப்ளை





இங்கிலாந்தில் 2 வயது குழந்தைக்கு தவறுதலாக சரக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இங்கிலாந்தின் ஸ்வான்சீ பகுதியில் உள்ளது. பிராங்கி அண் பென்னி ரெஸ்டாரன்ட். இங்கு சன்னி ரீஸ் என்ற 2 வயது குழந்தையின் 2-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. குழந்தையின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் சூழ பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எல்லோருக்கும் பலவித உணவுகள் வழங்கப்பட்டன. குழந்தைக்கும் ஜூஸ் உள்பட சில உணவுகள் ஊட்டப்பட்டன. சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை மயங்கிவிட்டது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு ஆல்கஹால் கொடுத்துள்ளனர். அதனால் மயங்கிவிட்டது என்று கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிகிச்சைக்கு பின் குழந்தை தெளிவடைந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், குழந்தைக்கு ஜூஸ் கொடுத்த போது முகத்தை சுளித்தது. உடனே ஜூஸை சிறிது குடித்து பார்த்தேன். அப்போது ஒன்றும் தெரியவில்லை. ரெஸ்டாரன்ட் சப்ளையரை கேட்ட பிறகுதான், தவறுதலாக குழந்தைக்கு விஸ்கி கொடுத்தது தெரிந்தது என்கிறார். இந்த சம்பவத்துக்கு பிராங்கி அண் பென்னி ரெஸ்டாரன்ட் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!