ஒழுங்காக பல் தேய்க்காமல் ஏமாற்ற முடியாது! வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ்
ப்ளூடூத் உதவியுடன் செயல்படும் டூத் பிரஷ்சை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பதை ஸ்மார்ட்போன் காட்டிவிடும். குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது மம்மிகள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர்தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ‘பீம் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் டிஜிட்டல் பிரஷ் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் உதவியுடன் இது செயல்படும். ஸ்மார்ட்போனில் அலாரம் செட் செய்தால், பல் துலக்க தினமும் நினைவூட்டும். அது மட்டுமின்றி, பயோ எலக்ட்ரிக் முறையில் பற்களுடன் பிரஷ் நன்றாக, போதிய அளவில் உராய்ந்ததா அதாவது, நீங்கள் ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அந்த தகவலும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் அளவுடன் இது ஒத்துப்போனால், ‘வெல்டன் பாஸ்’ என்று மெசேஜ் வரும். இல்லாவிட்டால், ‘ச்செல்லாது ச்செல்லாது’ என்று மெசேஜ் வரும். குட்டீஸ்களை கண்காணிக்க உதவியாக இருக்கும். பீம் ப்ளூடூத் பிரஷ் விலை ரூ.2,650. அடுத்த மாதம் அமெரிக்க சந்தைக்கு வருகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!