Tuesday, October 9, 2012

நைட்ரஜன் காக்டெய்ல் குடித்த டீன்ஏஜ் பெண் குடல் நீக்கம்

நைட்ரஜன் காக்டெய்ல் குடித்த டீன்ஏஜ் பெண் குடல் நீக்கம் : பர்த்டே பார்ட்டியில் பரிதாபம்



இங்கிலாந்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது காக்டெய்ல் மது குடித்த டீன் ஏஜ் பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக ஆபரேஷன் மூலம் அவரது குடலை டாக்டர்கள் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் லான்கேஷயரில் உள்ள ஹேஷாம் பகுதியை சேர்ந்த டீன் ஏஜ் பெண் கேபி ஸ்கேன்லான். இவர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் லான்காஸ்டரில் உள்ள ஆஸ்கார் என்ற மது பாருக்கு சென்றார்.

இங்கு கடந்த மாதம்தான் ஒரு புதுவகை காய்டெல் மது அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கு, போர்ன் ஸ்டார் மார்டினி என்று பெயர் வைத்துள்ளனர். பழங்கள், வோட்கா போன்றவற்றில் இந்த மது தயாரிக்கப்படுகிறது. திரவ நைட்ரஜனையும் சிறிது சேர்த்து மார்டினி தயாரிக்கப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படும் காக்டெய்ல் மதுவில் இருந்து புகை வரும். வித்தியாசமான இந்த காக்டெய்லை ஆர்டர் செய்தார் கேபி. அதை குடித்துவிட்டு நண்பர்களுடன் ஆட்டம் போட்டார். திடீரென கேபிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நேரம் ஆகஆக வலி அதிகமானது.

உயிர் போகும் அளவுக்கு ஏற்பட்ட வலியால் கேபி துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது குடல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால், அவசரமாக ஆபரேஷன் செய்து குடலை அகற்றினர். இப்போது கேபி அபாய கட்டத்தை தாண்டி விட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்கார் பாருக்கு சென்று விசாரணை நடத்தினர். நைட்ரஜன் சேர்க்கப்பட்ட காக்டெய்ல் மது விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 comments:

  1. ENGLANDla oru ponnu......TAMILNATTUla..???
    Ella TASMAC, G.H poi parunga sir...

    ReplyDelete
  2. ENGLANDla oru ponnu......TAMILNATTUla..???
    Ella TASMAC, G.H poi parunga sir...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!