Monday, October 8, 2012

மது, செக்ஸ், சிகரெட்டை விட அதிக ஆசையை தூண்டுவது பேஸ்புக், டுவிட்டர்தான்

மது, செக்ஸ், சிகரெட்டை விட அதிக ஆசையை தூண்டுவது பேஸ்புக், டுவிட்டர்தான்





காலத்துக்கு ஏற்ப மக்களின் விருப்பங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில் சினிமா மீது மக்களுக்கு அதிக மோகம் இருந்தது. இப்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பலருக்கு செக்ஸ், சிகரெட் போன்றவற்றை விட இவையே அதிக ஆசையை தூண்டுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் ஜெர்மனியில் ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 18 முதல் 85 வயது உடையவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மது, சிகரெட், செக்ஸ் மற்றும் பல்வேறு விருப்பங்கள் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களில் படங்களை பார்ப்பது, படிப்பது, கருத்துகளை எழுதுவது ஆகியவற்றை தவிர்க்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர். மது, செக்ஸ் போன்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தங்களின் ஆசையை தூண்டுவது இவை என்று தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற சிலர், எது ஆசையை தூண்டினாலும் எல்லாவற்றையும் விட வேலை செய்வதே தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். சினிமா, டிவி பார்ப்பதும் தவிர்க்க முடியாது என்று பலர் கருத்து கூறுவதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!