குளோனிங் ஆடு டாலியை உருவாக்கிய கேம்பெல் மரணம்
முதன் முதலில் குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் கேம்பெலும் ஒருவர். கெய்த் கேம்பெல் என்ற அவர் குளோனிங் முறையில் பெரிய ஆடுகளின் செல்களை கொண்டு அதேபோல் ஆட்டை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் குழுவில் முக்கிய பங்காற்றியவர். இந்நிலையில் கெய்த்கேம்பெல் திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 58.
உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பாலூட்டி வகையை சேர்ந்த ஆடு டாலி இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சார்பில் குளோனிங் ஆராய்ச்சியில் இயான் வில்மாட் என்பவர் தலைமையில் இணைந்து பணியாற்றியவர்களில் கேம்பெலும் ஒருவர். குளோனிங் முறையில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட செம்மறி ஆடு டாலி. இதில் கேம்பெலின் பங்களிப்பு 66 சதவீதம் என்று இயான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!