Monday, October 8, 2012

வீரர்களின் நினைவு ஜோதியில் ஆம்லேட் போட்டு சாப்பிட்ட பெண்ணுக்கு சிறை

வீரர்களின் நினைவு ஜோதியில் ஆம்லேட் போட்டு சாப்பிட்ட பெண்ணுக்கு சிறை





உக்ரைன் நாட்டில் உள்ள இரண்டாம் உலகப் போர் வீரர்களுக்கான நினைவு ஜோதியில் ஆம்லேட் போட்டு சாப்பிட்ட மாணவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் நகரில் இரண்டாம் உலகப் போர் வீரர்கள் நினைவு ஜோதி உள்ளது.

அந்த ஜோதியில் ஹென்னா சிங்கோவா(வயது 21) என்ற மாணவி முட்டையை உடைத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டார். இவர் பிரதர்வுட் ஆப் செயின்ட் லூகாஸ் என்ற இளைஞர் இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

இந்த செயல் குறித்து அவர் கூறுகையில், முன்னாள் போர் வீரர்களின் நிலை மோசமாக உள்ளது. அவர்களை முன்னேற்றும் வகையில் அரசின் கொள்கைகள் இல்லை.

முன்னாள் போர் வீரர்கள், முதியவர்கள், ஏழைகள் வாழ வழியில்லை. எனவே அவர்கள் விரைவில் இந்த நினைவு ஜோதியில் சமைக்க வரிசையில் நிற்கும் காலம் வரும் என்று விளக்கவே இதுபோல செய்தேன். எனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று கூறினார்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!