Friday, October 12, 2012

அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட், பிரையனுக்கு வேதியியல் நோபல் பரிசு

அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட், பிரையனுக்கு வேதியியல் நோபல் பரிசு



அமெரிக்க வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் ராபர்ட் லெப்கோவிட்ச், பிரையன் கோபில்கா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வேதியியல் துறைக்கான பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி, அமெரிக்க வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் ராபர்ட் லெப்கோவிட்ச் (69), பிரையன் கோபில்கா (57) ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள டுயூக் பல்கலைக்கழகத்தில் பயோமெடிசின் மற்றும் பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியராக ராபர்ட் பணியாற்றுகிறார். இதேபோல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு மருந்து பல்கலைக்கழக கல்லூரியில் மாலிக்கியூலர் மற்றும் செல்லுலார் துறை பேராசிரியராக பிரையன் பணியாற்றுகிறார்.
இவர்கள் செல் ஆராய்ச்சியில் பல்வேறு புதிய விஷயங் களை கண்டறிந்துள்ளனர். ஜி,புரோட் டீன் எனப்படும் செல்களில் இருக்கும் ஏற்பிகள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
செல் ஏற்பிகள் புதிய விஷயங்களை எப்படி ஏற்றுக் கொள்கின்றன என்பது குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!