கேரள அரசு புதிய திட்டம் காட்டுக்கு செல்ல பாஸ்போர்ட்
வெளிநாடு செல்ல விரும்பினால் அதற்கு பாஸ்போர்ட் அவசியம். ஆனால், நம் நாட்டுக்குள்ளேயே ஒரு இடத்துக்கு செல்ல பாஸ்போர்ட் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், கேரளாவில் வனப்பகுதியை பாதுகாக்க அங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு வனத்துறை சார்பில் பாஸ்போர்ட் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
‘கிரீன் பாஸ்போர்ட்’ என்ற இதில் 100 பக்கங்கள் இருக்கும். இதில், பாஸ்போர்ட் பெறுபவரின் பெயர், புகைப்படம், இயற்கையை பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். முதல்கட்டமாக, பெரியார் புலிகள் சரணாலயப்பகுதிக்கு அருகிலுள்ள 17 பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இப்பள்ளிகளில் இயங்கி வரும் இயற்கை கிளப்புகளில் சேர்ந்துள்ள 50 மாணவர்களுக்கு முதலில் பாஸ்போர்ட் வழங்கப்படும். முதலில் இந்த பாஸ்போர்ட்டுகளை அரசு இலவசமாக வழங்கும். இந்த திட்டம் வெற்றியடைந்தால் பின்னர் வனப்பகுதிகளுக்கு செல்ல விரும்பும்மக்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
வனப்பகுதிக்கு செல்லும்போது பாஸ்போர் ட்டை சோதனைச்சாவடியில் காண்பிக்கவேண் டும். உடனே பாஸ்போர் ட்டில் அந்த வனப்பகுதியின் சீல் வைக்கப்படும். இதன்பிறகு அந்த வனப்பகுதிக்கு சென்றுவரலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!