Tuesday, October 2, 2012

சர்கோசியின் உத்தரவின் பேரிலேயே கடாபி கொல்லப்பட்டார்: திடுக்கிடும் தகவல்

சர்கோசியின் உத்தரவின் பேரிலேயே கடாபி கொல்லப்பட்டார்: திடுக்கிடும் தகவல்




பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் உத்தரவின் பேரிலேயே கடாபி கொல்லப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி கடந்தாண்டு அக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து லிபிய போராட்டக்காரர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபி கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் அந்த வெளிநாட்டு முகவர், பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பத்திரிக்கையில்,

கடந்த 2007ஆம் ஆண்டு சர்கோசி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு மில்லியன் கணக்கான பண உதவியை கடாபி வழங்கினார் என்றும், இது தவிர மற்ற சில இரகசியங்களையும் பகிரங்கமாக அறிவிக்க போவதாக கடாபி மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாகவே கடாபியை கொலை செய்வதற்கு நிக்கோலஸ் சர்கோசி தேவையான முயற்சியில் ஈடுபட்டதாகவும், இத்திட்டத்தின் படி போராட்டக்காரர்களின் மத்தியில் ஊடுருவிய 22 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு முகவரே கடாபியை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!