Friday, October 5, 2012

டைனசோர்களை அழித்த விண் கல்லை கண்டுபிடித்தனர் !

டைனசோர்களை அழித்த விண் கல்லை கண்டுபிடித்தனர் !





பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, டைனசோர்கள் இறுதியில் முற்றாக அழிவுற்றது. இதற்கு பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறினாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய காரணம் ஒன்றாகத்தான் உள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியில் விழ்ந்த விண் கல் ஒன்றின் மூலமே டைனசோர்கள் அழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விண் கல் பூமியில் வீழ்ந்ததால் ஏற்பட்ட தூசு துகள்கள் வழி மண்டலத்தில் பரவியதால், சூரிய ஒளி தெறிப்படைந்ததாகவும், இதனால் கடும் குழில் ஏற்பட்டதால், டைனசோர்களின் முட்டைகள் பொரிக்கமுடியாமல் போய், இறுதியில் அனைத்து டைனசோர்களும் அழிவுற்றது என்று கூறப்படுகிறது. இது விஞ்ஞானிகளின் கருத்தாக மட்டுமே இருந்தது. ஆனால் அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியமான விடையம் ஆகும் !

றோமேனியா நாட்டில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் இக் கல் காணப்படுகிறது. பூமி தோன்றிய காலத்தில் இருந்து, இதுவரை பூமி மீது மோதிய கற்களுக்குள் இது தான் பெரியது என்று சொல்லப்படுகிறது. ஒரு மலையளவு பெரிய கல்லாக அது காணப்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த இக் கல்லில் பல படிமங்கள் காணப்படுவதாகவும், சில தாதுகள் இன்னும் அறியப்படாத மூலக்கூறுகளைக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. இத்த விண் கல்லின்மேல் தற்போது பூமியில் உள்ள தாதுகள் படிந்துள்ளது. மஞ்சல் மற்றும் ஊதா நிறத்திலான இந்த விண் கல் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வீழ்ந்துள்ளது.

இக் கல்லின் தாக்கத்தால் தான் பூமியில் டைனசோர்கள் அழிந்தது என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதனை ஆராய, அமெரிக்க விஞ்ஞானிகளும் இவ்விடத்தை நோக்கி விரைந்துள்ளனர். விரைவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது ! இறுதியில் டைனசோர்களின் அழிவு குறித்து நாம் துல்லியமாக அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!