10 லட்சம் அரிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் ஆய்வாளர்கள் சாதனை
இதுவரையிலும் கண்டறியப்படாத பல்வேறு வகையை சேர்ந்த 10 லட்சம் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் ஆய்வு கப்பல் டரா, உலகம் முழுவதும் கடலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இக்கப்பல் அட்லாண்டிக், பசிபிக், சதர்ன் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இதுவரை சுமார் 1,12,654 கி.மீ பயணத்தை நிறைவு செய்துள்ளது.
ஆய்வு குறித்து குழுவின் தலைவர் க்ரிஸ் பவுலர் கூறுகையில், இந்த ஆய்வை தொடங்கிய போது 5 லட்சம் புதிய கடல் வாழ் உயரினங்கள் கண்டறியப்படலாம் என்று கருதப்பட்டது. அதுவே எங்களது இலக்காகவும் இருந்தது.
ஆனால் 3 ஆண்டு கால ஆய்வில் 10 லட்சம் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக சிபோனோபோர் எனப்படும் வளைந்து நெளிந்த குழாய் போன்ற வடிவத்தில் சுமார் 150 அடி நீளத்தில் அரிய உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தான் உலகிலேயே அதிக நீளம் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
எனவே புதிய மற்றும் பழைய கடல்வாழ் உயிரினங்களையும் சேர்த்து இந்த கண்டுபிடிப்பு 15 லட்சத்தை தாண்டும். இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!