அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்
வட அமெரிக்காவில் உள்ள கவுதமலா நாட்டில் “பியூகோ” என்ற இடத்தில் மிகப்பெரிய எரிமலை உள்ளது.
அந்த எரிமலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பயங்கர சத்தம் எழுப்பி வரும் அதிலிருந்து சாம்பலும், புகையும் வெளியாகிறது.
எனவே, அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நெருப்பு குழம்புடன் பாறைகள் தூக்கி வீசப்படும். இது சுமார் 1000 மீற்றர் உயரத்துக்கு எழும்பும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பியூகோ எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 1 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கவுதமலா ஜனாதிபதி ஒட்டோ பெரீஷ் மொலினா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!