பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை இடிக்க தடை
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேட்டிவ் ஜெட்டி பிரிட்ஜ் பகுதியில், லட்சுமி நாராயண் கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் கட்டப்பட்டது.
கடல் நீர் கோவிலை தொடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் விழாவின் போது இந்த கடல் நீரில் சில சடங்குகள் செய்யப்படும்.
தற்போது கராச்சி துறைமுக பொறுப்பு கழகம் கோவிலுக்குச் செல்லும் கடல் நீர் பாதையை அடைத்தும், கோவிலின் சில பகுதிகளை இடித்தும் கட்டடம் கட்டி வருகிறது.
கட்டடம் கட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் போன்றவற்றால் இந்த பழங்கால கோவிலின் கட்டடம் முழுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, கைலாஷ் விஷ்ராம் என்பவர் சிந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முஷிர் ஆலம், கோவிலையொட்டி நடக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!